• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உக்கடம் ஜி எம் நகர் பகுதியில் கொரோனா பேரிடர் உதவி மையம் திறப்பு !

May 28, 2021 தண்டோரா குழு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அல் அமீன் காலனி டிவிசன் சார்பாக இன்று கொரோனா பேரிடர் உதவி மையம் ( corona relief center) உக்கடம் ஜி எம் நகர் பகுதியில் திறக்கப்பட்டது.

கோவையில் அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.முறையான வழிகாட்டுதல் கிடைக்காமலும், போதிய விழிப்புணர்வு இல்லாமலும் பொதுமக்களில் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.எனவே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பொதுமக்களின் அவசியம் கருதி கொரோனா பேரிடர் மையத்தை (covid relief centre) கோட்டை மேடு , கரும்புக்கடை,செல்வபுரம்,குனியமுத்தூர், குறிச்சி பிரிவு, காந்திபுரம் ஆகிய இடங்களில் துவங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக அல் அமீன் காலணி டிவிஷன் சார்பாக கொரோணா பேரிடர் உதவி மையம் இன்று காலை உக்கடம் ஜி.எம்.நகர் பகுதியில் திறக்கப்பட்டது.கொரோனா பேரிடர் உதவி மையத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அல் அமீன் காலணி டிவிஷன் தலைவர் A.முஹம்மது காசீம் முன்னிலையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில பொருளாளர் இப்ராஹிம் பாதுஷா திறந்து வைத்தார்.

தரிக்கத்துல் இஸ்லாம் ஷாபியா | சுன்னத் ஜமாஅத் தலைவர் பாட்ஷா, பாப்புலர் ஃப்ரண்ட் கோவை மாவட்ட தலைவர் M. I. அப்துல் ஹக்கீம், மாவட்ட செயலாளர்கள், உபைதுர் ரஹ்மான் , முஜீபூர் ரஹ்மான்,மற்றும் SDPI கட்சியின் கோவை மாவட்ட தலைவர் ராஜா உசேன் மற்றும் ஜமாத்தார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் கொரானா பேரிடர் உதவி மையத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

உதவி எண்கள். 99 525 79 108., 994 07 66 109

மேலும் படிக்க