March 17, 2021
தண்டோரா குழு
கோவை உக்கடம் கழிவுநீர் பண்ணையில் மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் பாதாள சாக்கடை கழிவுநீரை சுத்திகரிக்க உக்கடம், ஒண்டிப்புதூர், நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதிகளில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாநகராட்சி நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டது.இதில், மாநகராட்சி தெற்கு மண்டலம் 86-வது வார்டில் உக்கடம் கழிவுநீர் பண்ணை வளாகத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, அன்றாடம் சுமார் 3 கோடி லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.
உக்கடம் பகுதியில் கழிவுநீர் பண்ணையில் கழிவு நீர் லாரிகள் மூலமாக தினசரி கொட்டப்படுகிறது. இந்த பண்ணையில் மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,
‘‘ உக்கடம் கழிவுநீர் பண்ணையில் கழிவு நீர் முறையாக சுத்திகரிப்பு செய்யப்படுகிறதா? எனவும் அதன் செயல்பாடுகள் குறித்தும் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு வழக்கமான ஒன்று தான்,’’ என்றனர்.