• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உக்கடத்தில் மேம்பாலம் கட்டும் பணியால் போக்குவரத்து மாற்றம்

May 26, 2019

உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்படுவதாக போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பால
பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. அதில்அடுத்த கட்ட நடவடிக்கையாக நிறுத்தப்பட்ட தூண்களின் மேல் கர்டர்
(Girder) அமைக்கும் பணி வருகிற 27.5.2019 முதல் நடைபெற உள்ளது.

அதுசமயம் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும், பணிகளை விரைந்து முடிப்பதற்காகவும் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும், பணிகளை விரைந்து
முடிப்பதற்காகவும் போக்குவரத்தினை கீழ்கண்டவாறு மாற்றம்
செய்யப்படுகிறது. உக்கடம் சந்திப்பிலிருந்து பாலக்காடு மற்றும்
பொள்ளாச்சி சாலைகளுக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் பேரூர்
புறவழிச்சாலை, சேத்துமாவாய்க்கால் சந்திப்பு, புட்டுவிக்கி சாலை,
சுண்ணாம்பு கால்வாய் வழியாக பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி
சாலைகளை அடைந்து வேண்டிய இடங்களுக்கு செல்லுமாறு
போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, பொதுமக்கள் மேற்படி போக்குவரத்து மாற்றத்திற்கு
ஒத்துழைப்பு வழங்குமாறு கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை
சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க