‘ஈஷா கிராமோத்சவம்’ விளையாட்டு திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரமக்குடி எம்.எல்.ஏ திரு.முருகேசன் அவர்கள் பரிசுகள் வழங்கி வாழ்த்து கூறினார்.
ஈஷா அவுட்ரீச் சார்பில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கப்பட்ட 15-வது ஈஷா கிராமோத்சவம் திருவிழா செப்.23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் ஒருபகுதியாக, தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்துடன் இணைந்து மாநில அளவிலான கபடி போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முதல்கட்டமாக, மாவட்ட அளவிலான போட்டிகள் 38 மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டத்திற்கான போட்டிகள் பரமக்குடியில் உள்ள ராஜா சேதுபதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆக.26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளில் ஏராளமான வீரர், வீராங்கணைகள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். முதலிடம் பிடித்த அணி வீரர்களுக்கு பரமக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் அவர்கள் பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து கூறினார்.
பரமக்குடி முனிசபல் தலைவர் சேது கருணாநிதி, ராம்நாடு மாவட்ட வாலிபால் சங்க தலைவர் ரவிசந்திர ராமவன்னி, தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தின் மாவட்ட செயலாளர் ஜெயகுமார் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் சிறப்பாக ஆடிய வீரர்கள் மதுரையில் நடக்கும் மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்பார்கள். அதில் வெற்றி பெறும் அணிகள் கோவையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள்.
இறுதிப் போட்டியில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் ஆண்கள் அணிகளுக்கு முறையே, ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.1 லட்சம், ரூ.50,000 பரிசு தொகையாக வழங்கப்படும். மேலும், பெண்கள் பிரிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே, ரூ.2 லட்சம், ரூ.1 லட்சம், ரூ.50,000 மற்றும் ரூ. 25,000 பரிசு தொகையாக வழங்கப்படும்.
‘ஈஷா கிராமோத்சவம்’ திருவிழா கிராமப்புற மக்களின் வாழ்வில் விளையாட்டை ஒரு அங்கமாக மாற்றும் நோக்கத்துடன் 2004-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு