• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஈஷா சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சிறப்பு யோகா வகுப்பு

April 19, 2021 தண்டோரா குழு

ஈஷா அறக்கட்டளை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மத்திய சிறைகள், பெண்களுக்கான சிறப்பு சிறைகள் மற்றும் மாவட்ட சிறைகளில் சிறப்பு யோகா வகுப்புகள் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி 10 நாட்கள் ஆன்லைன் வாயிலாக நடைபெற உள்ளன.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருச்சி, கோவை, சேலம், மதுரை, கடலூர், பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள மொத்தம் 18 சிறைகளில் இந்த வகுப்புகள் நடைபெற உள்ளன. சத்குருவால் பயிற்சி அளிக்கப்பட்ட யோகா ஆசிரியர்கள் இவ்வகுப்பை நடத்த உள்ளனர்.

கொரோனா பாதிப்பு மிகுந்த இந்த சூழலில் சிறை கைதிகள் மற்றும் காவலர்களுக்கு உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் நோக்கத்தில் இவ்வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதில் சிம்ம க்ரியா, உப யோகா மற்றும் நமஸ்கார் யோகா உள்ளிட்ட எளிமையான அதேசமயம், சக்தி வாய்ந்த பயற்சிகள் கற்றுக்கொடுக்கப்படும்.

குறிப்பாக, இந்த யோகா பயிற்சிகளை செய்வதன் மூலம் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியும், நுரையீரல் திறனும் அதிகரிக்கும். மனதளவில் சமநிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிறை கைதிகளின் நலனுக்காக ஈஷா அறக்கட்டளை கடந்த 28 ஆண்டுகளாக இது போன்ற யோகா வகுப்புகளை இலவசமாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க