• Download mobile app
19 Oct 2025, SundayEdition - 3539
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஈஷாவில் ‘26-வது தியானலிங்க பிரதிஷ்டை தின’ விழாவை முன்னிட்டு நடைபெற்ற சர்வமத இசை அர்ப்பணிப்பு!

June 24, 2025 தண்டோரா குழு

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தியானலிங்கத்தின் 26-ஆம் ஆண்டு பிரதிஷ்டை தின விழா இன்று (ஜூன் 24) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் இந்து,பௌத்தம்,சீக்கியம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் மந்திர உச்சாடனங்களும்,பக்தி பாடல்களும் தியானலிங்கத்தில் அர்ப்பணிக்கப்பட்டன.

சாதி,மத,இன பேதங்களுக்கு அப்பாற்பட்டு, தியானம் மேற்கொள்ள விரும்பும் அனைவருக்கும் தியானலிங்க வாசல் திறந்தே இருக்கிறது.இதை உணர்த்தும் விதமாக பல்வேறு மதங்களின் சின்னங்களை தாங்கிய ‘சர்வதர்ம ஸ்தம்பம்’ எனும் தூண் தியானலிங்க வாயிலில் நிறுவப்பட்டு உள்ளது.அந்த வகையில் ஆண்டுதோறும் தியானலிங்க பிரதிஷ்டை தினத்தன்று பல்வேறு மதங்களின் மந்திர மற்றும் இசை அர்ப்பணிப்புகள் தியானலிங்கத்தில் நடைபெறுகிறது.

இந்தாண்டு பிரதிஷ்டை தின கொண்டாட்டங்கள் தியானலிங்கத்தில் காலை 6 மணிக்கு, ஈஷா பிரம்மச்சாரிகளின் “ஆஉம் நமசிவாய” மந்திர உச்சாடனையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஆதிசங்கரர் இயற்றிய ‘நிர்வாண ஷடகம்’ எனும் சக்திவாய்ந்த மந்திர உச்சாடனம் நிகழ்த்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து,கிருத்தவ பக்தி மற்றும் சூஃபி பாடல்களை ஈஷா ஆசிரமவாசிகள் பாடினர். பின்னர் புகழ்பெற்ற‘தேவார பதிகங்களை’ மயிலை சத்குரு நாதன் அவர்களும்,‘ருத்ர-சமக வேத பாராயணத்தை’ சிதம்பரம் கோவில் தீட்சிதர்களும் அர்ப்பணித்தனர்.அடுத்ததாக ‘செரா மே’ என்ற புத்த மடாலயத்தை சேர்ந்த துறவிகளின் ‘புத்த மந்திர உச்சாடனம்’ மற்றும் ‘இஷால் முராத்தின்’ இஸ்லாமிய அர்பணிப்பும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து குருத்வாரா சிங் சபா சார்பில் ‘குருபானி பாடல்கள்’, சத்குரு குருகுலம் சம்ஸ்கிருதி மாணவர்களின் பக்தி பாடல்கள், ‘நிஷாமி குஷ்ரூ சகோதரர்களின் ‘சூஃபி பாடல்கள்’ மற்றும் ‘ஏடாகூடம் இசைக்குழு’வின் சார்பில் ‘கிருத்தவ பக்தி பாடல்களும்’ பாடப்பட்டன.

இதனைத் தொடர்ந்து சத்குருவால் வடிவமைக்கப்பட்ட ‘தீட்சை’ எனும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சக்தி வாய்ந்த ஆன்மீக செயல்முறைகள், சிறப்பு நாத ஆராதனை, குரு பூஜை மற்றும் இசை அர்ப்பணிப்புகள் நடைபெற்றன. இறுதியாக சவுண்ட்ஸ் ஆப் ஈஷா குழுவின் இசை நிகழ்ச்சியோடு இந்தாண்டு கொண்டாட்டங்கள் நிறைவு பெற்றன.

ஈஷாவில் உள்ள தியானலிங்கம், சுமார் 3 ஆண்டுகள் தீவிர ஆன்ம சாதனைகளுக்கு பிறகு சத்குருவால் 1999-ஆம் ஆண்டு, ஜூன் 24-ம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. பாதரசத்தைக் கொண்டு ரச வைத்திய முறையில் உருவாக்கப்பட்டுள்ள லிங்கங்களில் இதுதான் உலகிலேயே மிகப்பெரிய லிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க