• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஈஷாவில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

January 26, 2021 தண்டோரா குழு

கோவை ஈஷா யோகா மையத்தில் 72-வது குடியரசு தின விழா இன்று (ஜனவரி 26) சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஈஷாவின் நுழைவு வாயிலான மலைவாசலில் நடந்த விழாவில் இக்கரை போளுவாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் திரு.சதானந்தம் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அவருடன் இக்கரை போளுவாம்பட்டி பஞ்சாயத்தின் வார்டு உறுப்பினர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்களும் விருந்தினராக உடன் பங்கேற்றார்.

இந்நிகழ்வில் சுற்றுவட்டார கிராம மக்கள், பழங்குடி மக்கள், ஈஷா தன்னார்வலர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். விழாவின் ஒருபகுதியாக, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவின் குடியரசு தின வாழ்த்து செய்தி வாசிக்கப்பட்டது.

அதில் சத்குரு கூறியிருப்பவதாவது:

நம் பாரத தேசம் 72 ஆண்டுகளாக மட்டுமின்றி, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகவே கலாச்சாரத்தின் தேசமாக வளர்ந்து வந்துள்ளது. இது வெறும் பிழைப்பை மட்டுமே நோக்கமாக கொண்ட கலாச்சாரம் கிடையாது. அதேபோல், மற்றவர்களை அடிமைப்படுத்தி ஆக்கிரமிக்கும் கலாச்சாரமும் கிடையாது.

பாரத கலாச்சாரம் ஆன்மீகத்தில் ஊறி வளர்ந்த கலாச்சாரம். நமக்கு சொர்க்கத்திற்கு போகும் ஆசை இல்லை. நமக்கு எதிலும் நம்பிக்கை இல்லை. நாம் எப்போதும் உண்மை தேடுதலில் இருக்குகிறோம்.இந்த 72-வது குடியரசு தினத்தில் நாம் அனைவரும் ஒரு உறுதி எடுத்து கொள்ள வேண்டும். நாம் எந்த செயல் செய்தாலும் அதனால் நம் நாட்டிற்கு நன்மை விளையுமா, விளையாதா என்பதை கவனத்தில் வைத்து செயலாற்ற வேண்டும்.

மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்த்தால், நாம் இளமையான நாடாக இருக்கிறோம். மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் 30 வயதிற்கு கீழ் இருக்கின்றனர். ஆகவே, அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் மகத்தான மாற்றம் கொண்டு வரும் வாய்ப்பு நம்மிடம் உள்ளது. மக்களின் வாழ்க்கையில் அடிப்படையான மாற்றங்களை கொண்டு வரும் வாய்ப்பும் உள்ளது.

இந்த வாய்ப்பு பாழாய் போகாமல் இருக்க வேண்டுமென்றால், பாரத நாட்டில் இருக்கும் எல்லா குடிமக்களும் இந்த உறுதியை ஏற்க வேண்டும். நாம் எதை செய்தாலும் அந்த செயலால் நாட்டுக்கு நல்லது மட்டுமே நடக்க வேண்டும் என்ற உணர்வுடன் செயலாற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் நம் நாடு ஒரு பவ்ய பாரதமாக உருவெடுக்கும்.

இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்.

மேலும் படிக்க