• Download mobile app
09 Mar 2026, MondayEdition - 3680
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஈரானில் தீ விபத்தால் கட்டடம் இடிந்து விழுந்து 3௦ பேர் பலி

January 20, 2017 தண்டோரா குழு

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் 17 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் தீயணைக்கும் வீரர்கள் 3௦ பேர் உயிரிழந்தனர். 38 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து ஈரான் தீயணைப்பு அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை (ஜனவரி 19) கூறியதாவது:

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பிரபல தொழிலதிபர் ஹபீப் எல்கானியனுக்கு சொந்தமான பிளாஸ்டிக் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அந்த நகரில் உள்ள 17வது மாடியில் இயங்கி வருகிறது. வியாழக்கிழமை 8 மணியளவில் திடீரென்று தீப்பிடித்தது.

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்களும் காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தாங்கள் விட்டுச் சென்ற பொருள்களை எடுக்க வந்த உள்ளூர் மக்களைச் சம்பவ இடத்தில் இருந்த காவல் துறையினர் தடுத்து பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

பல மணி நேரம் போராடிய பிறகும் தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை. இந்நிலையில், அக்கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. அதில், தீயணைப்புப் படையைச் சேர்ந்த 3௦ வீரர்கள் இடிப்பாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும், 5௦ முதல் 1௦௦ பேர் அந்த இடிப்பாடுகளில் சிக்கியுள்ளனர் என்று கருதப்படுகிறது. 38 பேர் காயமடைந்தனர். இந்த தீ விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க