August 21, 2021
தண்டோரா குழு
இ.பி.எப்., கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைக்கவிட்டால் ஆதாரை இணைக்காத சந்தாதாரர்கள் செப்டம்பர் 1ம் தேதி முதல் பணம் செலுத்தவோ, எடுக்கவோ, சலுகை பெறவோ முடியாது என இ.பி.எப். எனப்படும் வருங்கால வைப்பு நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வருங்கால வைப்பு நிதி திட்ட சந்தாதாரர்கள், தங்களின் யு.ஏ.என்., எனப்படும் ஒருங்கிணைந்த கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இ.பி.எப்., கணக்கு எண்ணுடன் ஆதார் எண் இணைக்காத சந்தாதாரர்களின் கணக்கிற்கு, அவர்களது நிறுவனத்திடம் இருந்து சந்தா தொகை வசூலிக்கப்பட மாட்டாது. செப்டம்பர் 1ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வர உள்ளது.
ஆதார் எண்ணை இணைக்கும்படி நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எந இ.பி.எப். வலியுறுத்தி உள்ளது. இணையதளம் வாயிலாகவோ அல்லது இ.பி.எப்., அலுவலகத்திலோ ஆதார் எண்ணை இணைக்கலாம். இத்தகவலை கோவை மண்டல பி.எப் கமிஷனர் ரஞ்சாய் முசாஹரே தெரிவித்துள்ளார்.