• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இ-சேவை மையங்களில் வண்ண வாக்காளர் அடையாள அட்டை

February 28, 2017 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையங்களில் வண்ணப் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, பிளாஸ்டிக் ஆதார் கார்டு போன்றவற்றைப் பொதுமக்கள் பெற்று, பயனடையலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழக மக்கள் சிரமமின்றி எளிதாக சான்றிதழ்களைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானதே இந்தப் பொது இ சேவை மையம். 2014-ம் தொடங்கப்பட்ட இத்திட்டம் பொதுமக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து அனைத்து வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் இ சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டத்தில் செயல்படும் 231 இ-சேவை மையங்களில் 1,38,995 சாதிச் சான்றிதழ்கள் , 1,82,037 வருமான சான்றிதழ்கள், 6,67,93 இருப்பிடச் சான்றிதழ்கள் , 10,405 முதல் பட்டதாரி சான்றிதழ்கள், 61 கணவனால் கைவிடப்பட்டோருக்கான சான்றிதழ்கள் மற்றும் 33,239 பட்டா மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

திருமண உதவித் தொகைக்கு விண்ணப்பித்தல், 2 பெண் குழந்தைகள் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தல், மின் கட்டணம், பிளாஸ்டிக் ஆதார் அட்டை எடுத்தல் போன்ற பல்வேறு வகையிலான பணிகள் இ-சேவை மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது வண்ணப் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகளும் ரூ.50 கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை உள்ள பொதுமக்கள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணைத் தெரிவித்து வண்ணப் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையைப் புதிதாகப் பெற்றுக் கொள்ளலாம்.அதே போல் ஏற்கெனவே ஆதார் எண் உள்ளவர்கள் புதிய பிளாஸ்டிக் ஆதார் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மின்னணு இ-சேவை மையத்தின் மூலம் சான்றிதழ் பெற்ற பயனாளி காளிராஜ் கூறுகையில்,

“நான் பெரியநாயக்கன்பாளையம் டேங்க் முதல் வீதியில் வசித்து வருகிறேன். எனக்குக் கண்பார்வை கிடையாது. சான்றிதழ்களைப் பெறுவதற்கு தமிழக அரசு எளிதான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது என்பதை ஒருவர் சொல்ல அறிந்தேன்.

அதன்படி, கோயம்புத்தூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் வண்ணப் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, பிளாஸ்டிக் ஆதார் அட்டை போன்ற சேவைகள் வழங்கப்படுவதை விசாரித்து அவற்றைப் பெற வேண்டி விண்ணப்பித்தேன்.

மணியக்காரர், ஆர்.ஐ., தாசில்தார் ஆகியோரைத் தேடி அலையாமல் ஒரே இடத்தில் எனது விவரங்களைப் பதிவு செய்து, மிக சுலபமாகச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன். எங்களது சூழ்நிலையைப் புரிந்து கொண்டு தமிழக அரசு இது போன்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருவது மன நிறைவு தருகிறது” என்றார்.

மேலும் படிக்க