December 26, 2020
தண்டோரா குழு
இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு கொரோனா தற்காப்பு கவச உடைகள் நல்லறம் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.
நல்லறம் அறக்கட்டளை சார்பில் கோவை சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவ மனையில் கொரோனா தற்காப்பு கவச உடை வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நல்லறம் அறக்கட்டளை தலைமை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். இஎஸ்ஐ மருத்துவமனை டீன் விமலாவிடம், 1500 கொரோனா தற்காப்பு கவச உடைகளையும், மேலும், இஎஸ்ஐ மருத்துவமனைக்கு ஆயிரம் புத்தகங்களையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சிங்கமுத்து, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் தமிழ் முருகன், பகுதி செயலாளர் பிந்து பாலன்,
நல்லறம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர்கள் நல்லறம் முருகவேல், ரோட்டரி மணிகண்டன், செல்வபுரம் புரட்சித் தலைவி அம்மா பேரவை பகுதி செயலாளர் எஸ்.ஆர். குமார், அர்ஜூன், சிடிசி தண்டபாணி, சிடிசி ரங்கராஜ், 53 வது வார்டு செயலாளர் பன்னீர்செல்வம், பாலாஜி, மோகன் ராஜ், வார்டு செயலாளர் துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.