• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இலங்கை தாதா அங்கோடா லொக்காவின் கூட்டாளியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு

December 19, 2020 தண்டோரா குழு

இலங்கை தாதா அங்கோடா லொக்காவின் பெற்றோரின் ரத்த மாதிரிகளை சேகரிக்க சிபிசிஐடி போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். கூட்டாளியை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கோவை சேரன்மாநகரில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்த இலங்கையின் தாதா போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா கடந்த ஜூலை மாதம் 3-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார். இவர் இறப்பு தொடர்பான விடயங்களை கொண்டு ஆராய்ந்தபோது அவர் இறப்பு இயற்க்கையானது என்று மருத்துவ அறிக்கை தெரிவித்தன.இறந்த அங்கோடா லொக்கா மாரடைப்பினால் இறந்ததாக கூறி அவருடைய உடலை, அவருடன் தங்கியிருந்த இலங்கைக் காதலி அமானி தான்ஜி, அவர்கள் இருவரும் கோவையில் தங்குவதற்கு உடந்தையாக செயல்பட்ட மதுரையை சேர்ந்த வக்கீல் சிவகாமி சுந்தரி, ஈரோட்டை சேர்ந்த தியானேஸ்வரன் ஆகிய 3 பேரும் அவரது உடலை மதுரைக்கு கொண்டு சென்று எரித்தனர். அவர் பிரதீப் சிங் என்ற பெயரில் போலியான ஆவணங்கள் மூலம் கோவையில் தங்கி இருந்துள்ளார்.

இது தொடர்பாக முதலில் பீளமேடு போலீசார் ஆள் மாறாட்டம் செய்த கோணத்தில் விசாரனை தொடங்கப்பட்டன. பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. அவர்கள் கோவையில் முகாமிட்டு அங்கோடா லொக்கா தங்கியிருந்த வீடு, பயிற்சி பெற்ற ஜிம் உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்தனர். அவருடைய காதலி அமானி தான்ஜி, சிவகாமி சுந்தரி மற்றும் தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு கஸ்டடி விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் கோவையில் உயிரிழந்தது அங்கொட லொக்கா தானா? என்பதை உறுதிபடுத்த டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டனர். இதற்காக அவரது பெற்றோரிடமிருந்து ரத்த மாதிரிகள் மற்றும் இலங்கை போலீசாரிடமுள்ள அங்கொட லொக்காவின் கைரேகை ஆகியவற்றை பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார், கடந்த ஆகஸ்டு மாதம் ரத்தமாதிரிகள், கைரேகையை இலங்கை அரசிடமிருந்து பெற்றுத்தரக் கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பினர். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தாமதமாகியது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால், இப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக கடந்த, 7-ந் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் கடிதத்தை மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்துக்கு அனுப்பி நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளது.சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் கடிதத்தை மத்திய வெளியுறவு துறை அமைச்சகம், இலங்கை அரசுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. இலங்கையில் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளதால் ரத்தமாதிரிகள், கைரேகைகளை அனுப்பி வைக்க சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதவிர மாநில அரசின் உள்துறை செயலகம் சார்பில் இவ்வழக்கை கண்காணிக்க ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கு நடவடிக்கைகளை கவனித்து வருகிறார்.

அங்கொட லொக்காவின் கூட்டாளியான சனுக்கா தனநாயக்கா இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு சென்றிருக்க வாய்ப்பில்லை. அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா முகமாற்று அறுவை சிகிச்சை மேற்க்கொண்ட நிலையில், அவருடைய கள்ள கடத்தல் கூட்டாளியும் தன் அடையாளத்தை அழித்து ஏதேனும் தடயங்களை மாற்றி பதுங்கி தலைமறைவானாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க