• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இலங்கை கடற்படையினர் தாக்குதலில் தமிழக மீனவர் ஒருவர் பலி

March 7, 2017 தண்டோரா குழு

இந்திய-தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் திங்கள்கிழமை இரவு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர் உயிரிழந்தார்.

ராமேசுவரம் மாவட்டத்திலிருந்து இருநூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப் படகுகளில் மீன்பிடிக்க திங்கட்கிழமை இரவு கடலுக்குச் சென்றனர். அவர்கள் இந்தியா-இலங்கை கடல் எல்லை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர் எனக் கூறப்படுகிறது.

இரவு நேரத்தில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடிக்க முயற்சி செய்துள்ளனர்.

இது குறித்து மீனவர் ஒருவர் கூறுகையில், “எங்கள் மீது வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் விரட்டியடித்தனர். எல்லைப் பகுதியை மீறி செல்லவில்லை. ஆனாலும் அவர்கள் நம் நாட்டு எல்லைக்குள் வந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்” என்றார்.

இந்த தாக்குதலில் ராமேஸ்வரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ என்ற 21 வயது வாலிபர் கழுத்தில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இதனால் மீனவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவசர அவசரமாகக் கரைக்குத் திரும்பினர்.

இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் பலியான மீனவரின் உடலை மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பார்வையிட்டார். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது சர்வதேச நீதிமன்றத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க