• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இலங்கையின் 8 வது அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்பு

November 18, 2019

இலங்கையில் 8-வது அதிபர் தேர்தல் 16.11.2019 நடந்தது. இதில் சுமார் 81.52% வாக்குகள் பதிவாகின. அதை தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. அதிபர் தேர்தலில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் பொதுஜன பெரமுனா கட்சியின் கோத்தபய ராஜபக்சே 6,924,255 வாக்குகள் (52.25%) பெற்று வெற்றி பெற்றதாக, அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இவரை எதிர்த்து போட்டியிட்ட பிரதான கட்சியான புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசா 5,564,239 வாக்குகள் (41.99%) பெற்று தோல்வி அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, தனது மூத்த சகோதரரும், முன்னாள் அதிபருமான, மகிந்த ராஜபக்சேவின் பிறந்தநாளில் பதவியேற்க முடிவு செய்தார். இதன்படி, புத்தர் ஞானம் பெற்ற போதி மரக் கிளையிலிருந்து வளக்கப்பட்ட புனித மரம் அமைந்துள்ள அநுராதபுரம் ஜெய ஸ்ரீ மகாபோதி ஸ்தலத்திலும், ருவன்வெலி மகா சாய பௌத்த விஹாரிலும் மத வழிபாட்டில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து, ருவன்வெலி மகா சாய பெளத்த விஹார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், இலங்கையின் 8 ஆவது அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜயந்த ஜெயசூர்யா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

கோத்தபய பதவியேற்பு விழாவில், முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே, மற்றொரு சகோதரர் பசில் ராஜபக்சே உள்ளிட்டோரும், வெளிநாடுகளின் தூதர்களும் பங்கேற்றனர்

பதிவியேற்றப்பின் உரையாற்றிய கோத்தபய ராஜபக்சே,

“இந்த நாட்டில் வாழும் அனைவருக்குமான சலுகைகள், சமாதானம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் தன்னாலான உதவிகள் அனைத்தையும் செய்வேன். இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முழு மூச்சுடன் இறங்கி செயல்படுவேன். நாட்டிலுள்ள புறதானமான அனைத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு மதம், இனம் என்று பாராமல் எல்லா மக்களையும் ஒரேவிதமாக வழிநடத்துவேன்” என்று கூறியுள்ளார்.

இலங்கை அதிபராக பதவியேற்றுள்ள கோத்தபய ராஜபக்சே, அரசு அலுவலகங்களில், தனது படத்தையோ, பிரதமர் மற்றும் அமைச்சர்களின் படங்களையோ வைக்க கூடாது என முதல் உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ கொடியாக, தூய்மையின் சின்னமான வெண்தாமரை மலர் பொறிக்கப்பட்ட கொடி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இலங்கையில் ஒவ்வொரு அதிபருக்கும், பிரத்யேக கொடிகள் அறிமுகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க