June 9, 2018
தண்டோரா குழு
பிறந்த சில மணி நேரத்தில் குழந்தை மூச்சின்றி இருந்ததால் இறந்துவிட்டதாக நினைத்து புதைக்கப்பட்ட குழந்தை 8 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டின் கனரனா பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு பிறந்த குழந்தை சில மணி நேரத்தில் மூச்சின்றி காணப்பட்டது. இதனால் குழந்தை இறந்துவிட்டதாக அவர்கள் நினைத்துவிட்டு அருகில் உள்ள சுடுகாட்டுக்குச் சென்று குழந்தையை அடக்கம் செய்து வீடு திரும்பி விட்டனர். இந்நிலையில் குழந்தையை அடக்கம் செய்யப்பட்டு 8 மணி நேரத்திற்கு பின்னர் அப்பகுதி வழியாக சென்ற ஒருவர் குழந்தையின் அழுகுரல் அருகில் கேட்பதாக போலீஸை அழைத்துள்ளார்.
இதையடுத்து அங்கு வந்த போலீஸார் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் இரண்டு அடி தோண்டியதில் குழந்தை உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தையை பத்திரமாக மீட்ட போலீஸார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர்,பெற்றோர்களிடம் தகவல் அளித்து குழந்தையை ஒப்படைத்தனர்.
இறந்துவிட்டதாக நினைத்து புதைக்கப்பட்ட குழந்தை உயிருடன் இருந்தது குறித்து அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.