• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இருதய நோய்களை தடுப்பதற்கான சவால்கள் குறித்த கருத்தரங்கு

August 7, 2022 தண்டோரா குழு

கோயமுத்தூர் இதய மருத்துவ சம்மேளனத்தின் (cardiological society of coimbatore), மூன்றாவது பதிப்பு இன்று நடைபெற்றது. இதை, சம்மேளன தலைவர் டாக்டர் டி.எம்.டி.சரவணன், தொடங்கி வைத்தார்.

இம்மாநாட்டில், கொங்கு மண்டலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து, 400 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர். இருதய நோய்களை (cardiovascular disease CVD) தடுப்பது மற்றும் இருதய நோய்களால் ஏற்படும் இறப்பை கட்டுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு, கோயமுத்துார் இருதய மருத்துவ சம்மேளனம், இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து, கோயமுத்துார் இருதய மருத்துவ சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் டி.எம்.டி.சரவணன் பேசுகையில்,

‘‘இருதய நோய்கள் குறித்தும், ஊட்டச்சத்து உணவு முறையின் முக்கியத்துவம் பற்றியும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே, இச்சம்மேளனத்தின் நோக்கமாகும். மேலும், இருதய நோய்களுக்கும், சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறைக்கும் உள்ள தொடர்பு குறித்து, விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். இம்மாநாடு, பொது மருத்துவர்கள் மற்றும் இருதய நோய் நிபுணர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்,’’ என்றார்.

கோயமுத்துார் இருதய மருத்துவ சம்மேளனத்தின் செயலாளர் டாக்டர் சர்வேஸ்வரன் பேசியதாவது:

இதுபோன்ற மாநாடுகள் மூலமாக தான், நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிப்பது குறித்து, மருத்துவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியும். இதன்மூலம், நமது திறமைகளை மேம்படுத்தி கொள்ளலாம். இக்கட்டான சூழலில், நோயாளிகளுக்கு வெற்றிக்கரமான முறையில் எவ்வாறு சிகிச்சை அளிப்பது, நோயின் வீரியத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை புரிந்து கொள்ளவும் உதவிபுரியும்.
மேலும் இம்மாநாட்டில், இருதயவியல் மாரடைப்பு தடுப்பது, உயர் ரத்த அழுத்தம், இருதய துடிப்பு தொடர்பான நோய்கள், இருதய வால்வு தொடர்பான நோய்கள் மற்றும் இருதய செயலிழப்பில் இருந்து மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு, முக்கியத்துவம் அளிக்கப்படும். இதோடு, பல்வேறு இருதய நோய்களின் ஆரம்பகால நோயறிதல் மற்றும் சரியான மேலாண்மை குறித்தும் விளக்கப்படும்,’’ என்றார்.

தொடர்ந்து இவர் பேசுகையில்,‘‘

இருதய செயலிழப்பு நோயாளிகளுக்கு மேம்பட்ட சிகிச்சை அளிப்பது குறித்தும், இம்மாநாட்டில் கவனம் செலுத்தப்படும். எதிர்காலத்தில் இருதய நோய் தாக்குதல்களின் அபாயத்தை மதிப்பிடுவதற்கான கட்டமைக்கப்பட்ட மதிப்பீடு மற்றும் சிகிச்சைக்கு தகுந்த வழிகாட்டுதல், ஆரம்ப நிலையிலே இருதய நோயை கண்டறிவதற்கான வழிமுறைகள் குறித்தும், குறைந்தபட்ச ஊடுருவக்கூடிய அறுவை சிகிச்சை முறைகள், இந்நகரத்தில் கிடைக்க வழிவகை செய்வதும், இம்மாநாட்டின் முக்கிய அம்சமாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க