July 5, 2018
தண்டோரா குழு
இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அவசியம் அணிய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிவது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அவசியம் அணிய வேண்டும் என்றும்,நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருசக்கர வாகனங்களில் பகல் நேரங்களில் எல்இடி விளக்குகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும்,வாகனங்களில் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்,கார்களில் சீட் பெல்ட் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி பிறப்பித்த சட்டத்தை அமல்படுத்தியது குறித்து வரும் 27ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறை மற்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
–