• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரத்தினம் கல்லூரியின் வணிகவியல் துறை , வென்ஸ்டர் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

April 14, 2021 தண்டோரா குழு

இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பாக வென்ஸ்டர் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக வரும் 2021 கல்வியாண்டில் வணிகவியல் துறையில் பயிலும் மாணவர்கள் (CA, BPS, B&I, A &F, CS, IT, IB and PA) வணிகவியல் துறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், குறும் திட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் பெரும் உதவியாக அமையும்.

இப்புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் வென்ஸ்டர் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் அமைப்பின் நிர்வாகப் பங்குதாரர் மனோஜ் , கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.முரளிதரன் ,கல்லூரியின் முதன்மை நிர்வாக அலுவலர் முனைவர் ஆர்.மாணிக்கம், வணிகவியல் துறைப் புலமுதன்மையர் முனைவர் T.M.ஹேமலதா, வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் V.T. தனராஜ் மற்றும் நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் U.பொன்மணி மற்றும் துறைப் பேராசிரியர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக மாணவர்களின் வேலைவாய்ப்பு திறன், வணிகவியல் துறை சார்ந்த பன்முக நோக்கிலானஆய்வுகள், குறும் திட்ட ஆய்வுகள், மாணவர்களின் தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையிலான ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் பெரும் உதவியாக அமையும்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மனோஜ் இத்தகைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மாணவர்களுக்கு அறிமுகம் செய்த நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இதன் மூலம்பயன்பெற இருக்கின்ற கல்லூரி மாணவர்களுக்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் படிக்க