April 20, 2018
தண்டோரா குழு
தென் தமிழக கடலோரப் பகுதிகளில் அடுத்த இரண்டு தினங்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கூறுகையில்,
தென் கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகரித்து காணப்படும்.கடலில் ஏற்படும் இயற்கை மாற்றத்தால் அலையின் சீற்றம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.மேலும்,மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும்,அரசு வெளியிடும் அறிவிப்புகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.