December 19, 2020
தண்டோரா குழு
கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள கெளமார மடாலயம் சார்பில் பேருர் ஆதினம், சிரவை ஆதினம், மற்றும் தமிழாய்வு அறக்கட்டளை சார்பில் இரண்டாம் உலகத் தமிழாய்வு மாநாடு மற்றும் இசைத்தமிழ் ஆய்வரங்கம் நடைபெறுகிறது. இன்று மற்றும் நாளை நடைபெறும் இந்த நிகழ்வில் தமிழ் இசை தொடர்பான ஆய்வறிஞர்கள் இணையவழி மூலமாக ஆய்வுரை நடத்தினர்.
மேலும் தமிழ் இசை சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இதில் அரியவகை தமிழர் இசை கருவிகள் உட்பட 70 தமிழர் இசைக்கருவிகள் காட்சிபடுத்தபட்டுள்ளன.
இது குறுத்து பேசிய தமிழாய்வு அறக்கட்டளை நிறுவனர் சிவக்குமார்,
இசைத்தமிழ் ஆய்வரங்கில் பாமர இசை, நாட்டுப்புற இசை, தொல்லியம் குறுத்து கலந்தாய்வு நடைபெறுகிறது என்றும் அழிந்து வர கூடிய தமிழர் இசை கலைகள் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இது நடத்தப்படுகின்றது என்று தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய கோசை நகரான் குழுவின் உறுப்பினர் சிவக்குமார்,
வைரஸ் தொற்று காலத்தில் பெரும் சிரமத்திற்கு பிறகு இந்த கண்காட்சி நடைபெறுகிறது என்றும் இந்த வருடம் புதுமையாக ஐம்முக குடவு, யாழ் போன்ற இசைக்கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது என்றும் இங்கு வரும் பார்வையாளர்கள் கருவிகளை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு கருவியை பற்றியும் அறிந்து கொள்ளலாம் என்றும் எவ்வாறு வாசிப்பது என்றும் செய்து காண்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.