• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரட்டை இலை வழக்கு விசாரணை: நவ., 6க்கு ஒத்திவைப்பு

November 1, 2017 தண்டோரா குழு

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கின் விசாரணை நவ.6-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலா அணி, பன்னீர் அணி என அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டது. இதனால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கியது.

இதற்கிடையில், முதல்வர் பழனிசாமி, பன்னீர் அணிகள் இணைந்தது.அதன்பின்,’இரட்டை இலை சின்னத்தை, தங்கள் அணிக்கு தர வேண்டும்’ என தேர்தல் கமிஷனில் கோரிக்கை வைத்து புதிய பிரமாண பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. இதற்குப் போட்டியாக தினகரன் அணியினரும் தங்களுக்கே சின்னம் ஒதுக்க வேண்டும் என மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இரட்டை இலை தொடர்பான வழக்கு விசாரணை டில்லியில் உள்ள, தேர்தல் கமிஷனில் கடந்த அக்., 6; அக்., 13; அக்., 23ல் என மூன்று கட்டங்களாக நடந்தது. பின்னர் வழக்கு விசாரணை நவ.1-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை டெல்லியில் இன்று நடைபெற்றது. ஓ.பி.எஸ். எடப்பாடி பழனிச்சாமி மற்றும் டி.டி.வி. தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தங்களது தரப்பில் விளக்கங்களை அளித்து வாதாடினார்கள். சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற இந்த விசாரணை மாலை 6 மணிவரை நீடித்தது.

பின்னர், தினகரன் தரப்பு தங்களது வாதத்தை நவ. 6-ம் தேதி நிறைவு செய்வதாக உறுதியளித்தது. இதையடுத்து விசாரணை மீண்டும் நவ. 6-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஐந்தாவது முறையாக இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க