• Download mobile app
30 Nov 2025, SundayEdition - 3581
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக அதிமுக இரு தரப்பும் மார்ச் 22ல் நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவு

March 17, 2017 தண்டோரா குழு

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்பது தொடர்பாக முடிவெடுக்க அதிமுகவின் இரு தரப்பினரையும் தேர்தல் ஆணையம் நேரில் அழைத்துள்ளது.

ஆர்.கே. நகரில் வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. அதிமுக இரண்டாக பிரிந்த நிலையில் அதிமுக சசிகலா அணி சார்பில் தினகரனும், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர்.

பிளவுபட்ட அதிமுகவில் எந்த அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவது என்பது குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் அணியும் சசிகலாவின் அதிமுகவினரும் தங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திடம் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

இந்நிலையில், ஓபிஎஸ் அணி சார்பில் இரட்டை இலை சின்னத்தைத் தங்களுக்கு ஒதுக்க மனு அளித்துள்ளனர். எனவே, அதன் மீதான சசிகலா தரப்பின் கருத்தைக் கேட்டு தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸுக்கு சசிகலா வரும் 20ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரு தரப்பினரும் தில்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு வந்து தங்கள் தரப்பைத் தெரிவிக்க தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

இதையடுத்து, வரும் 20ம்தேதி இரு தரப்பினரையும் விசாரித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க