• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இயற்கை வேளாண் உற்பத்தியை பெருக்க வேளாண் பரப்பளவை அதிகப்படுத்த வேண்டும் – டிஜிபி சைலேந்திரபாபு

July 6, 2019 தண்டோரா குழு

இயற்கை வேளாண் உற்பத்தியை பெருக்க வேளாண் பரப்பளவை அதிகப்படுத்த வேண்டும் என கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற காவ்ல்துறை டிஜிபி சைலேந்திரபாபு வலியுறுத்தியுள்ளார்.

உணவுப்பொருட்கள் குறித்த விழிப்புணவும், இயற்கை வேளாண்மைக்கான வரவேற்பும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இயற்கை வேளாண்மையை முறைப்படுத்தவும், அதனை அறிவியல் பூர்வமாக அனுகவும் எவ்வாறான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்கிற அடிப்படையில் கோவையில் இஸ்காப் என்ற வேளாண் அமைப்பு மற்றும் கிருஷ்ணமூர்த்தி சர்வதேச வேளாண் மேம்பாட்டு மையம் ஆகியவற்றின் சார்பில் ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் வேளாண் விஞ்ஞானிகள்,வேளாண் உற்பத்தியாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

மேலும் இக்கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக தமிழக ரயில்வே காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர்,

விவசாயிகளுக்கு நிலையான வருமானம் வருவதற்கான நடவடிக்கைகள் தேவை எனவும், நாட்டின் வளர்ச்சிக்கு அதிகமான அறிவியல் விஞ்ஞானிகள் தேவை இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். விவசாய பழ்கலைக்கழகங்கள் முயற்சியால் உணவு உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும், அதே வேளையில் மக்கள் தொகைப்பெருக்கம் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய பெரும் சவாலான விஷயமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும்சந்தையில் மக்களுக்கு கிடைக்கும் உணவுப்பொருட்களின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், இயற்கை விவசாயம் இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாததாக இருப்பதாகவும் கூறினார்.தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் இயற்கை வேளாண்மை பரப்பளவை பெருக்குவது,நிலத்தடி நீர் செரிவூட்டல்,கழிவு நீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட நான்கு தலைப்புகளின் கீழ் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன.

மேலும் படிக்க