• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இயற்கை விவசாயம் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் வந்து உள்ளது

July 15, 2022 தண்டோரா குழு

கோவையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

இந்த கண்காட்சியை தொடங்கி வைப்பதில் ஒரு விவசாயி ஆக மகிழ்ச்சி அடைகிறேன், விவசாயி ஆகிய எங்களை போன்றவர்களுக்கு புது தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை தெரிந்து கொள்ளவும் அறிந்து கொள்ளவும் இது போன்ற கண்காட்சி உதவியாக இருக்கும், தொழில் அதிபர்கள் இன்றைய தினம் வேட்டியை கட்டி கொண்டு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளனர் எனவே வேளாண்மை மதிக்கப்படுகிறது.

வேளாண் துறைக்கு முதல்வர் தனி பட்ஜெட் அறிவித்து உள்ளார் உழவர்களுக்கு எல்லாம் இந்த அரசாங்கத்தால் மதிக்கப்படுகிறோம் என்ற உணர்வு விவசாயிகளுக்கு ஏற்பட்டு உள்ளது, அதை மெருகூட்டும் வகையில் புதிய கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது நவீன தொழில் நுட்பம் போன்றவற்றை விவசாயிகள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.

பாம்பு கடித்து இறப்பவர்களுக்கு மருத்துவ உதவி, இரவு நேரத்தில் மோட்டார் இயக்கம் போன்றவற்றிற்கு இழப்பீடு அரசாங்கத்தால் கொடுக்கப்படுகிறது, மோட்டார்களை வீட்டில் இருந்தே இயக்குவதற்கான கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டு 10ஆயிரம் விவசாயிகளுக்கு சோதனை முறையில் கொடுக்கப்பட்டு உள்ளது, விவசாயிகளுக்கு எப்போதும் எல்லாமுமே போராட்டம் தான், தென்னை விவசாயிகளுக்கு நெல் புகை, வண்டு கடி மற்றும் வெள்ளை ஈக்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த மனித வளத்துறை மற்றும் வேளாண் பல்கலைக்கழகம் மூலம் ஆராய்ச்சி பணிகளை ஆரம்பித்து உள்ளோம், பூச்சி தாக்குதல் ஆரம்பித்த உடனே மருந்துகளை தெளிக்க ஆலோசனை கூறுகிறோம் இப்போது 15கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இயற்கை விவசாயம் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் வந்து உள்ளது, அதை கொண்டு வர வேண்டும் என்பதற்காக 1 லட்சம் விவசாயிகள் மும் வந்து உள்ளனர், இயற்கை விவசாயம் செய்ய 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக பயன்பாட்டுக்கு வந்து மருந்துடைய தாக்கம் இல்லாமல் பயிர் வளரும், அதற்கு இயற்கை உரங்கள் மானியத்துடன் கொடுக்கப்படுகிறது.

கோவையை போன்ற மாவட்ட அளவில் நடத்துகின்ற பணியை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முன்னெடுத்து உள்ளனர். இந்த ஆண்டு 50 ஆயிரம் மின் இணைப்பு கொடுக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்து உள்ளேன், ஆனால் 6 மாதத்தில் 1 லட்சம் மின் இணைப்பு என்பதை அறிவித்தது முதல்வர், ஆனால் முடியாது என்றனர், அதை முடித்து காட்டியவர் முதல்வர் என்றார்.

மேலும் படிக்க