• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இயற்கை முறையில் சுவையான தண்ணீராக மாற்றக்கூடிய ஆரோ சுத்திகரிப்பு முறையில் ஒரு புதிய படைப்பு

October 18, 2019 தண்டோரா குழு

தண்ணீரை சுத்திகரிக்கவும் சத்தான சுவை மாறாமல், இயற்கை முறையில் சுவையானதண்ணீராக மாற்றக்கூடிய ஆரோ சுத்திகரிப்பு முறையில் ஒரு புதிய படைப்பினை கேபிஆர் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் புதிய தலைமுறை கண்டுபிடித்துள்ளனர்.

கோவை அரசூர் பகுதியில் அமைந்துள்ள கேபிஆர் கல்லூரியில் முன்னாள் மாணவர்களான மோகன் குமார் மற்றும் ஜோகிந்தர் ஆகியோர் இணைந்து தண்ணீரை சுத்திகரிக்கும் சத்தான சுவை மாறாமல் மாற்றக்கூடிய கிருமிகளை அழிக்கக்கூடிய ஆரோ சுத்திகரிப்பு முறையில் ஒரு புதிய படைப்பினை உருவாக்கியுள்ளனர். புதிய படைப்பான அத்தியா டெக் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் மூத்த அறிவியலாளர் டேனியல் செல்லப்பா, கேபிஆர் மில்ஸ் நிர்வாக இயக்குனர் கே பி டி சிகாமணி, தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் அகிலா ஆகியோர் முன்னிலையில் புதிய படைப்பின் அறிமுகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் மூத்த அறிவியலாளர் டேனியல் செல்லப்பா கூறும்போது இளம் மாணவர்களின் புதிய படைப்பு திறனை நாம் அங்கீகரித்து வரவேற்க வேண்டும் இந்த தொழில்நுட்பம் மக்கள் மத்தியில் விரைவில் சென்றடைந்தால் சுத்தமான குடிநீர் அவரிடம் சென்று சேரட்டும் என்று கூறினார்.

இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வர் அகிலா மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி தலைமை நிர்வாக அதிகாரி ஏ எம் நடராஜன் மற்றும் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க