• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இயற்கை சமநிலையை காக்க வனவிலங்குகளை பாதுகாப்போம் சிந்திக்குமா 6ம் அறிவு !

December 14, 2021 சிராஜ்தீன்

இணையற்ற அளவிலான அறிவை கொண்டவர்களாக நாம் இருப்பதால், இந்த உலகத்தில் உள்ள நுண்மையான பொருட்கள் மற்றும் உயிரினங்களை பாதுகாக்கும் பொறுப்பு நம்முடையதாகும். ஆனால் அப்படி எதுவுமே நடப்பதில்லை. உண்மையிலேயே மிகவும் வேதனை தருகிறது விஷயம் இது. அவசர காலச் சூழல் என்றும் , வளர்ச்சி என்கிற பெயரில் வன பகுதியில் வாகனத்தில் அடிப்பட்டு உயிருக்குப் போராடும் வன உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதிலும் குறிப்பாக குரங்குகள் , ஒரு காலத்தில் தங்களுக்கு தேவையான உணவுகளை தாமே தேடி உண்டு மகிழ்ந்தன, உணவு தேடி வனத்துக்குள் பரவலாக செல்லும் குரங்குகளின் எச்சத்தால் வனங்கள் செழிப்பாகவும் , பல தாவரங்கள், அழியாமலும் பாதுடுகாப்பாகவும் இருந்தது.ஆனால் மனிதர்கள் தற்போது ஒரு உயிரினத்தின் இயற்கை குனத்தை மாற்றும் போது ஏற்படும் அழிவுக்கு காரணமான செயல்களை செய்வதும் , ஈடுபடுவதும் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.

சாலையோரத்தில் நிற்கும் குரங்குகளுக்கு கருணை என்ற பெயரில் உணவுகளை கொடுத்து வனவிலங்குகளின் உணவு பழக்க வழக்கங்களை மாற்றி சாலைகளில் செல்கிறது வாகனத்தில் உணவுக்காக வழிமேல் விழிவைத்து காத்திருக்கும் குரங்குகள் காருக்கு குறுக்கே பாய்ந்து இறந்து போகும் அவலநிலைக்கு தள்ளப்படுகிறது.இதனால் அவை நம்மிடம் இருந்து உணவு பொருட்களைஎதிர்பார்ப்பதும், பிடுங்கிச் செல்வதும் வழக்கமாகி வருகின்றன. மனிதர்களை தாக்குவதும் அவ்வப்போது நிகழ்கின்றன. எனவே விலங்குகளை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்வது சிறப்பு மிக்கவை.

மேலும் படிக்க