January 22, 2026
தண்டோரா குழு
கோவை ஜிஆர்ஜி அறக்கட்டளை 2026 ஆம் ஆண்டு நிறுவனர்கள் தின விழா அவினாசி சாலையில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
ஜிஆர்ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஜி.ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற இதில்,ஜிஆர்ஜி அறக்கட்டளையின் நிறுவன அறங்காவலர் டாக்டர்.நந்தினி ரங்கசாமி அனைவரையும் வரவேற்று பேசினார்.
விழாவில் தலைமை விருந்தினராக தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல்,காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு,மற்றும் கவுரவ விருந்தினராக ஈரோடு, யுஆர்சி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தேவராஜன் சின்னுசாமி கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக விழாவில் பேசிய சுப்ரியா சாஹூ,
அரிய வகை பூச்சிகள் மற்றும் பறவை இனங்களை திரையில் காண்பித்து மாணவிகளிடையே பேசினார். பிளாஸ்டிக் பயன் பாடுகளால் சுற்றுச்சூழலை மனித இனம் பாழ்படுத்தி வருவதை சுட்டி காட்டிய அவர்,உயரிய சுற்றுச்சூழல் சவால்கள் தற்போது இருப்பதாகவும், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் வனவிலங்கு மற்றும் இயற்கை தாவரங்கள், புற்கள், பறவைகள்,பூச்சிகள் போன்ற இயற்கை உயிரினங்களை பாதுகாப்பதில் தற்போது கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் என தெரிவித்தார்.
விழாவின் ஒரு பகுதியாக, சென்னை, ரானே (மெட்ராஸ்) (Rane Madras) லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கௌரி கைலாசம் அவர்களுக்கு 2026 ஆம் ஆண்டிற்கான சந்திரகாந்தி கேட்டலிஸ்ட் லீடர் விருது வழங்கப்பட்டது.
இதே போல இந்தியாவின் டிஜிட்டல் மற்றும் தொழில்முனைவோர் துறையில் ஆற்றிய முன்னோடிப் பங்களிப்பிற்காக, மேட்ரிமோனி.காம் (பாரத் மேட்ரிமோனி) நிறுவனத்தின் நிறுவனர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முருகவேல் ஜானகிராமனுக்கு 2026 ஆம் ஆண்டிற்கான ஜிஆர்ஜி டிரெயில்பிளேசர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தொடர்ந்து,பெண்களுக்கான முறையான வழிகாட்டுதல் மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டின் மூலம் எதிர்கால பெண் தலைவர்களை வளர்க்கும் விதமாக பெண்களின் தலைமைத்துவத்திற்கான சந்திரகாந்தி ஃபெலோஷிப் திட்டம் தொடங்கப்பட்டது.
விழாவின் ஒரு பகுதியாக பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் புகழ்பெற்ற முன்னாள் மாணவிகள், தங்களின் தொழில்முறைச் சிறப்பு மற்றும் அந்தந்தத் துறைகளில் அவர்கள் ஆற்றிய தொடர்ச்சியான பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக கே.சி.டபிள்யூ பிராண்ட் தூதுவர்களாக விதமாக, கௌரவிக்கப்பட்டனர். விழாவில் , ஹீரோ ஃபின்கார்ப் லிமிடெட்டின் மூத்த கடன் ஒப்புதல் அதிகாரி ரமா மீனாட்சி; இந்திய அரசின் வருமான வரித் துறை துணை ஆணையர் லீனா அன்டோனெட் மரியா,அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், அமெரிக்காவின் வணிக மதிப்பீடு, காப்பீடு மற்றும் இடர் மேலாண்மைத் துணைத் தலைவர் .புவனேஸ்வரி முரளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா இறுதியில் ஜி.ஆர்ஜி/கே.சி.டபிள்யூ-வின் ஆலோசகர் பேராசிரியர் பாலசுப்பிரமணியன் நன்றியுரை வழங்கினார்.