• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இயந்திரத்தில் சிக்கிய பெண்ணின் தலைமூடி…8 மணி நேர போராட்டத்தில் வெற்றி கண்ட மருத்துவர்கள்!

December 9, 2020 தண்டோரா குழு

இயந்திரத்தில் தலை சிக்கி முடி சதையுடன் கழன்ற பெண்ணுக்கு 8 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக பொருத்தி கோபி அபி எஸ்.கே. மருத்துவமனையில் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கோபி வடக்கு வீதியைச் சேர்ந்த அலுமினிய தகடு செய்யும் தொழில் செய்து வரும் ஒருவர் கடந்து மாதம் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது மனைவியின் தலை முடி எதிர்பாராத விதமாக இயந்திரத்தில் சிக்கியது. இதில் அவரது தலையில் இருந்த முடி சதையுடன் கழன்று கீழே விழுந்து விட்டது.

இதையடுத்து, உயிருக்கு போராடிய மனைவியை மீட்டு கோபியில் உள்ள அபி எஸ்.கே.மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றார். அப்போது அங்கு மருத்துவர் குமரேசன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிதைந்த நிலையில் இயந்திரத்தில் சிக்கியிருந்த அந்த பெண்ணின் தலைமுடியை அறுவை சிகிச்சை செய்து மீண்டும் பொருத்த முடிவு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் டாக்டர். குமரேசன் தலைமையிலான மருத்துவக்குழு அந்த பெண்ணின் சிதைந்த முடியை அவரது தலையில் வெற்றிகரமாக பொருத்தி சாதனை படைத்துள்ளனர். அந்த தற்போது நலமாக உள்ளதாக மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மருத்துவர் குமரேசன் கூறுகையில்,

‘அப்பெண் இயந்திரத்தில் சிக்கி தலைமுடி முழுவதுமே தோலோடு பிய்த்து எடுக்கப்பட்ட நிலையில் தலையில் இருந்த மிக நுண்ணிய ரத்த நாளங்கள், நரம்புகள் துண்டிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.மருத்துவர்கள், அறுவை அரங்கு உதவியாளர்கள், செவிலியர்கள் என 15க்கும் மேற்பட்டோரின் கடின உழைப்பால் அப்பெண்ணின் சிதைந்த முடியை அவரது தலையில் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. தற்போது அந்த பெண் மிகவும் நலமுடன் உள்ளார்’ என்றார்.

ஈரோடு மாவட்டளவில் இதுபோன்று சிக்கலான அறுவை சிகிச்சை முதல் முறையாக செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க