• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இயக்குனர் அமீருக்கு கோவை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவு

June 25, 2018 தண்டோரா குழு

தனியார் தொலைகாட்சி விவாதத்தில் கலந்து கொண்டு திரைப்பட இயக்குநர் அமீர்,பொது அமைதியை பாதிக்கும் வகையில் பேசியது உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் முன் ஜாமின் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசாங்கதால் கருத்துரிமையை பறிக்கும் சமீபத்திய கைதுகளை நீதிமன்றம் ஏற்காமல்,நீதியின் பக்கம் இருப்பதை எண்ணி பெருமை கொள்ள வேண்டும் என அமீர் தெரிவித்துள்ளார்.கோவையில் தனியார் தனியார் தொலைக்காட்சி இம்மாதம் நடத்திய விவாத நிகழ்ச்சியில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இது தொடர்பாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரைப்பட இயக்குநர் அமீர் மீதும்,அந்நிறுவனம் மற்றும் அதன் செய்தியாளர் மீதும் வழக்கு போடப்பட்டது.இதில் அமீர் மீது போடப்பட்ட வழக்கு தொடர்பாக முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று இம்மனு மீதான விசாரணை மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இதனையடுத்து நடைபெற்ற விவாதத்தின் அடிப்படையில் அமீருக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக பீளமேடு காவல்நிலையத்தில் ஆஜாராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுபப்பட்டதையடுத்து,இன்று பீளமேடு காவல்நிலையத்தில் ஆஜரானார்.சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காவல் நிலையத்தில் அமீர் விளக்கமளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“நிகழ்வில் கலந்து கொண்ட நோக்கம்,என் தரப்பில் பேசப்பட்டது மற்றும் எதிர் தரப்பில் பேசியது குறித்து காவல் துறையிடம் விளக்கம் அளித்தாகவும்,நிகழ்ச்சியின் போது என்னை தாக்க வந்தவர்கள் தொடர்பாக பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.விவாதத்தில் அமீர் பேசியதில் என்ன தவறு உள்ளது என இன்று முன் ஜாமின் வழங்கிய நீதிபதியும் கேட்டு இருக்கிறார் என சுட்டிக்காட்டிய அமீர் தன் மீது எந்த தவறும் இல்லை எனக் கூறினார்.

சமீபத்திய அனைத்து கைதும்,கருத்துரிமையை பறிக்கும் வகையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டவை என்றும்,இவற்றை நீதிமன்ற ஏற்றுக்கொள்வதில்லை என தெரிவித்தார். மேலும்,நீதிமன்றங்கள் நீதியின் பக்கம் இருப்பதை எண்ணி பெருமை பட்டுக்கொள்ள வேண்டியது தான் என்றும் அவர் கூறினார்”.

மேலும் படிக்க