• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இயக்குனர்கள் விஜய் மற்றும் கவுதம் மேனனுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

November 5, 2019 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் விஜய், ‛தலைவி’ என்ற பெயரில் கங்கனாவை கொண்டும், இயக்குனர் பிரியதர்ஷினி, ‛தி அயர்ன் லேடி’ என்ற பெயரில் நித்யா மேனனை கொண்டும் படம் இயக்குகிறார்கள்.

இயக்குனர் கவுதம் மேனன், ‛குயின்’ என்ற பெயரில் ரம்யா கிருஷ்ணனை வைத்து வெப் சீரிஸ் இயக்குகிறார்.இதற்கிடையில், தன்னுடைய அனுமதியில்லாமல் தலைவி படத்தையும்,இணையதள தொடரையும் தயாரிக்க தடை விதிக்கக் கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று(நவ., 5) நீதிபதி கல்யாண சுந்தரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது,மனுதராரின் குடும்ப அந்தரங்கத்தை பாதிக்கும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்படலாம் என்றும் அச்சம் தெரிவித்த தீபா தரப்பு வழக்கறிஞர், ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கு பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து நவம்பர் 14ம் தேதிக்குள் பதிலளிக்க இயக்குனர்கள் விஜய் மற்றும் கவுதம் மேனன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு,வழக்கை 14ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

மேலும் படிக்க