• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இயக்குநர் கே.வி.ஆனந்த் காலமானார் – திரையுலகினர் இரங்கல்

April 30, 2021 தண்டோரா குழு

பிரபல திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி ஆனந்த்(54). கொரோனா தொற்று பாதிப்புக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அதிகாலை 3 மணியளவில் காலமானார்.

இவர் அயன், மாற்றான், கவண், காப்பான், கோ, அநேகன் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கியவர். பத்திரிகைகளில் புகைப்பட கலைஞராக வாழ்க்கையை தொடங்கிய கே.வி. ஆனந்த், ஒளிப்பதிவாளராக தனது முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றார். பிரித்வி ராஜ், ஶ்ரீகாந்த் நடிக்க கணா கண்டேன் படத்தை முதன்முதலாக இயக்கி இயக்குநராக அவதாரம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது திடீர் மறைவு தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இவரது மறைவிற்கு ரஜினி, கமல், தனுஷ், மோகன்லால் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க