March 10, 2018
தண்டோரா குழு
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும் இமயமலை செல்வது வழக்கம். அந்த வகையில் தற்போது ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் காலா படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது. இதுமட்டுமின்றி தற்போது அரசியல் பிரவேசம் எடுத்துள்ள ரஜினி இன்று இமயமலை புறப்பட்டுள்ளார்.
இதற்காக சென்னையில் இருந்து இன்று அதிகாலை விமானம் மூலம் புறப்பட்ட அவர், சிம்லா சென்று அங்கிருந்து தர்மசாலா, ரிஷிகேஷ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறார். இமயமலையில் அவர் 10 முதல் 15 நாட்கள் வரை தங்க திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையில், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி,
அரசியல் இயக்கம் தொடங்க உள்ள நிலையில் செல்வதால் புதிதாக வேண்டுதல் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார்