January 27, 2018
தண்டோரா குழு
இன்றைக்கு தேவர் மகன், அன்பே சிவம் போன்ற படங்களை எடுக்க முடியாதுஎன நடிகர் கமலஹாசன் கூறியுள்ளார்.
சென்னை தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது பேசிய அவர்,
தரமான கல்வி, குடிநீர் வசதி செய்து தருவதே அரசின் கடமைகள். சாதியாலும் மதத்தாலும் பிரிவினை ஏற்படுத்துவது தவறு. சமூக மாற்றத்தை மாணவர்களால் தான் கொண்டு வரமுடியும்.அரசியல்வாதி இப்படி தான் இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். நாட்டு நடப்புகளை மாணவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அது உங்கள் கடமை.. நம் தெருவை சுத்தமாக பார்த்து கொண்டாலே நாடு சுத்தமாகும். குழந்தைகளை எந்தவித கட்டுப்பாடும் இன்றி சுதந்திரமாக செயல்பட விடவேண்டும். தலைவர்கள் தேவையில்லை; மாணவர்களே தலைவர்களாக செயல்பட வேண்டும். சரியாக பணியாற்றாத பிரதிநிதிகளை மக்கள் தூக்கி எறியுங்கள். சும்மா இருங்கள், பேசாதீர்கள் என்பது ஜனநாயமா…? இன்றைக்கு தேவர் மகன், அன்பே சிவம் போன்ற படங்களை எடுக்க முடியாது. பத்மாவத் படத்தின் பெயரால் மாணவர்கள் சென்ற பஸ் தாக்கப்படுகிறது. ஊழலற்ற அரசியல் என்பது சாத்தியமில்லை. சாத்தியம் என்பது சொல்ல அல்ல செயல். நாளை நமதே என்பது உங்களையும் சேர்த்து தான்.
இவ்வாறு அவர் பேசினார்.