• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இனி ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் -போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

August 7, 2019 தண்டோரா குழு

சென்னையில், ஹெல்மெட் அணியாமல் டூவிலரில் செல்லும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.100லிருந்து ரூ.1000 ஆக விரைவில் உயர்த்தப்பட உள்ளதாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

சாலை விபத்துக்கள் தற்போது அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க மோட்டார் வாகனச் சட்டத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்திருத்தத்தில், தற்போது உள்ள அபராதத்தை விட பன்மடங்கு அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்த மோட்டார் வாகன திருத்த மசோதாவை மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில், சென்னையில், ஹெல்மெட் அணியாமல் டூவிலரில் செல்லும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.100லிருந்து ரூ.1000 ஆக விரைவில் உயர்த்தப்பட உள்ளதாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சாலைவிபத்துகளில் உயிர் இழப்பவர்கள் இளைஞர்களாகவே இருப்பதாகவும், அதுவும், 90% இளைஞர்கள் தலைக்கவசம் அணியாததாலேயே தலையில் காயம் பட்டு உயிரிழக்க நேரிடுகிறது. தலைக்கவசம் அணிகின்ற சிலரும், Chin Strap சரிவர அணிவதில்லை என்பதை சுட்டுக்காட்டும் போலீஸ், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும்போதும், கடைக்கு செல்லும்போதும் தலைக்கவசம் அணிய விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக சிலர் தவறாக நினைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், விபத்து எங்கே எப்போது நடக்கும் என்று யாருக்கும் தெரியாது என்பதால், எங்கே சென்றாலும், எவ்வளவுத்தூரம் சென்றாலும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், பின்னால் அமர்ந்து செல்பவரும் தலைக்கவசம் அணியவேண்டும் என்றும் போலீஸ் அறிவுறுத்தியுள்ளனர்.தற்போது மோட்டார் வாகனச்சட்டம் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதால், தலைக்கவசம் அணியாதவருக்கு விதிக்கப்படும் ரூ. 100 இருந்து 1000 ஆக விரைவில் உயர்த்தப்பட உள்ளது. எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் வீட்டிலிருந்து புறப்படும்போது செல்பேசி போன்றவற்றை மறக்காமல் எடுத்து செல்வது போல், உயிர்காக்கும் தலைக்கவசத்தை அணிந்து செல்வதை பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும் என்று போலீஸ் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க