• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இனி கோவை டூ கோவா விமானத்தில் பறக்கலாம் – இன்று முதல் துவக்கம் !

December 1, 2021 தண்டோரா குழு

கோவை – கோவா இடையே முதல் முறையாக இன்று முதல் விமான போக்குவரத்து சேவை துவங்கியது.

கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, டெல்லி ஐதராபாத் மற்றும் சார்ஜா உள்ளிட்ட பெருநகரங்களுக்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது.இதற்கிடையில், கோவை விமான நிலையத்தில் இருந்து கோவை-கோவா இடையே நேரடி விமானசேவை டிசம்பர் மாதம் துவங்கும் என இண்டிகோ ஏர்லைன்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் கோவை – கோவா இடையே விமான சேவை துவங்கியது. அதிகாலை 1.45க்கு கோவையில் இருந்து கோவா சென்ற இந்த விமானத்தில் 40 பேர் பயணம் செய்தனர்.இந்த விமானம் அதிகாலை 3.05 ற்கு கோவா சென்றடைந்தது.
அதேபோல் 3.35க்கு கோவாவில் இருந்து கோவைக்கு புறப்பட்ட இந்த விமானத்தில் 66 பேர் பயணித்தனர்.இந்த விமானம் கோவைக்கு காலை 5.05க்கு வந்தடைந்தது.

கோவை-கோவா இடையே நேரடி விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் படிக்க