• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இனி என் தலைவர் ஸ்டாலின்! – திமுக பொருளாளர் துரைமுருகன் நெகிழ்ச்சி

August 28, 2018 தண்டோரா குழு

நேற்று வரை தம்பியாக, தளபதியாக இருந்தார். இன்று முதல் எங்களுக்குத் தலைவர் மு.க.ஸ்டாலின் என்று துரைமுருகன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததைடுத்து அக்கட்சியில் தலைவர் பதவி காலியானது.
இதனையடுத்து, தலைவர் பதவிக்கு ஸ்டாலினை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் சென்னையில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுகவின் 2வது தலைவராக முக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பொதுச்செயலாளர் அன்பழகனால் வெளியிடபட்டது. அதைப்போல் பொருளாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டார்.இந்நிலையில் திமுக பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலினை வாழ்த்தி திமுக பொருளாளராக தேர்தெடுக்கப்பட்ட துரைமுருகன் பேசினார்.

அப்போது பேசிய துரைமுருகன்,

மரியாதைக்குரிய என் தலைவர் மு.க.ஸ்டாலின்.இப்படி நான் அழைப்தற்கு இத்தனை நாள் வாழ்ந்தேனே அது போதும்.நான் உங்கள் வீட்டிற்கு வந்தபோது நீங்கள் குட்டிப் பையன். வளர்ந்து தோழனாகி இன்று தலைக்கு மேல் வளர்ந்து தலைவானாகி வீட்டீர்கள்.மகிழ்ச்சி மகிழ்ச்சி உள்ளார்ந்த மகிழ்ச்சி.இப்போது பேச எனக்கு வார்த்தை வரவில்லை.எனது கண்ணீர் இன்னும் நிற்கவில்லை.. எனது இதயச்சுமை இறங்கவில்லை.பொருளாளர் தகுதிக்கு என்னை உயர்த்தி வைத்துள்ளீர்கள்.அதற்கு நான் தகுதி உடையவனாக கருதவில்லை. ஆனால் நீங்கள் என்னை உயர்த்தியுள்ளதால் அதற்குரியவானாக நான் திகழ்வேன். என்னுடைய அரசியல் குரு கலைஞர் கருணாநிதி உறங்கிக்கொண்டிருக்கும் அந்தத் திசை நோக்கி வணங்கி இந்தப் பொறுப்பை ஏற்கிறேன். கலைஞர் வகித்த பொறுப்பு பொருளாளர் பதவி.எம்ஜிஆர், பேராசிரியர், ஸ்டாலின், ஆற்காடு வகித்த பொறுப்பு இது. தலைவன் இல்லாமல் போனாலும் அவர் விட்ட விழுது நீங்கள் இருக்கிறீர்கள்.

அப்போது சிலுவை சுமந்து, ரத்தம் சிந்தி, மிகப்பெரிய சூறாவளிக்குப் பிறகுதான் தலைவர் பொறுப்புக்கு வந்தார் கலைஞர். ஆனால், சிறு சலசலப்பு இல்லாமல், துளியும் எதிர்ப்பு இல்லாமல், லட்சோபலட்சம் தொண்டர்களாலும் மக்களாலும் ஆதரவு பெற்று, எவருக்கும் மனக்குறையில்லாத நிலையில், ஒட்டுமொத்தமாக எல்லோரும் ஏகோபித்த எண்ணத்துடன் தலைவராகி இருக்கிறார் ஸ்டாலின். மிகவும் பெருமையாக இருக்கிறது. கலைஞருக்கு நிகராகவே ஸ்டாலினைப் பார்க்கிறேன்.நீங்கள் ஒரு சரித்திர புருஷன். வரலாற்றில் இடம் பெறப் போகிற தலைவர் நீங்கள். இது பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் இது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க