January 20, 2018
தண்டோரா குழு
ஆண்டுதோறும் இனிமேல் பேருந்து கட்டணம் மாற்றியமைக்கப்படும்என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு பஸ் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. சாதாரண பஸ்களில் குறைந்தபட்சம் ரூ.7 ஆகவும், நகர பேருந்துகளில் ரூ.6 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் விரைவு, சொகுசு பஸ்களிலும் கட்டணம் கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று அறிவிக்கப்பட்ட பேருந்து கட்டண உயர்விற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டது. அதில், இனிமேல் ஆண்டுதோறும் பேருந்து கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என்றும் தமிழக அரசின் உயர்மட்டக்குழு அறிக்கைப்படி தேவைப்படும் போது பேருந்து கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.