• Download mobile app
02 Apr 2026, ThursdayEdition - 3704
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்து முன்னணி நிர்வாகியின் கார் தாக்கப்பட்ட விவகாரம் – இந்து முன்னணி நிர்வாகி 2 பேர் கைது

September 27, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி பத்ரிநாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

இன்று மேட்டுப்பாளையம் மகாலிங்கபுரம் பகுதியில்இந்து முன்னணியை சேர்ந்த ஹரீஷ் என்பவரின் கார் தாக்கப்பட்ட வழக்கு சம்மந்தமாக அதே பகுதியை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி தமிழ்ச்செல்வன் (24), அவரது நண்பர் ஹரிஹரன் (25.) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியின் போது முன் விரோதம் ஏற்பட்டதன் காரணமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.சிசிடிவி பதிவுகள் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.சட்டவிரோதமான காரணம் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.சுழற்சி முறையில் இரவு பகலாக மாவட்டம் முழுவதும் 1500போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் இரண்டு பிளைவுட் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில்கூடிய விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள், விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

மேலும் படிக்க