• Download mobile app
14 Feb 2026, SaturdayEdition - 3657
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்து முன்னணி நிர்வாகிகளின் கார் மற்றும் ஆட்டோக்கள் தாக்கப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது

September 26, 2022 தண்டோரா குழு

பொள்ளாச்சியில் கடந்த இருபதாம் தேதி இந்து முன்னணி நிர்வாகிகளின் கார் மற்றும் ஆட்டோக்கள் தாக்கப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி அடுத்துள்ள குமரன் நகர் பகுதியில் உள்ள இந்து முன்னணி நிர்வாகி பொன்ராஜ் மற்றும் சிவா,சரவணகுமார் ஆகியோரின் கார்களின் மீது டீசல் நிரப்பப்பட்ட கவர்களை வீசியும் கோடரியால் வாகனங்களை தாக்கியும் தப்பி ஓடிய மர்ம நபர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த முகமது ரபீக் 26. மாலிக் என்ற சாதிக் பாஷா 32, ரமீஷ்ராஜா 36 ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க