• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்து சிறுவனின் உயிரை காப்பாற்ற நோன்பை விட்ட இஸ்லாமியர் !

May 28, 2018

பீகாரில் சிறுவனுக்கு ரத்த தானம் வழங்குவதற்காக இஸ்லாமியர் ஒருவர் ரம்ஜான் நோன்பை பாதியில் முடித்து கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

பீகார் மாநிலம் கோபால் கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூபேந்திரகுமார், இவரது மகன் புனித்குமார் . இவர் தெலாஸ்மியா என்ற ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் 15 நாட்களுக்கு ஒரு முறை புதிதாக ரத்தம் ஏற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் திடீரென புனித்குமாரின் உடல் மோசமானதால் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டான். திடீரென அவனுக்கு ரத்தத்தின் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டன. இதனால் அவனுக்கு உடனடியாக ‘ஏ பாசிடிவ்’ ரத்தம் ஏற்றவேண்டும் என மருத்துவர் கூறினார். ஆனால் அந்த ரத்த வகை புனித்குமாரின் குடும்பத்தினரிடம் இல்லை, மேலும் மருத்துவமனையிலும் அந்த ரத்தம் கிடைக்கவில்லை.

இந்நிலையில், சிறுவனுக்கு ரத்தம் வேண்டி கஞ்ச் மாவட்ட ரத்த தான குழுவின் நிறுவனர் அன்வர் உசேனை தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது, அவர் உடனே ‘ஏ பாசிடிவ்’ ரத்த வகையை கொண்ட ஆலம் ஜாவீத் என்பவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அவர் நோன்பிருப்பதால் ரத்தம் எடுக்க முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து, சிறுவனின் உயிரை காப்பாற்ற தான் இருந்த நோன்பை ஆலம் ஜாவீத் உடனே முறித்துக் கொண்டார். அதன் பின் சிறுவனுக்கு ரத்த தானம் செய்தார். இந்த உதவியை என்றும் மறக்க மாட்டோம் என்று சிறுவனின் குடும்பத்தினர் கூறினர்.

ஒரு உயிரை காப்பாற்ற இறைவனுக்காக இருந்த நோன்பை முறித்து கொண்டு சிறுவனுக்கு ரத்த தானம் வழங்கிய ஆலம் ஜாவீத்திற்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மேலும் படிக்க