• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்துக்கள் ஓட்டு யாருக்கு?-இந்து முன்னணி அமைப்பு சார்பில் இந்து விழிப்புணர்வு ஊழியர் கூட்டம்

March 30, 2019 தண்டோரா குழு

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் நூறு சதம் வாக்களிக்க கோரி இந்துமுன்னணி அமைப்பு சார்பில் கோவையில் நடைபெற்ற இந்து முன்னனி ஊழியர் கூட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.

இந்துக்கள் ஓட்டு யாருக்கு என இந்து முன்னணி அமைப்பு சார்பில் இந்து விழிப்புணர்வு ஊழியர் கூட்டம்அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் கோவை காந்தி பார்க் பகுதியிலுள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்து முன்னணி தொண்டர்கள் மற்றும் பெண்க்ள் திரளாக பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய காடேஸ்வரா சுப்பிரமணியம்,

இந்து விரோத கொள்கையை கொண்ட காங்கிரஸ் திமுக கூட்டணியை புறக்கணித்து இந்துக்களுக்கு ஆதரவாக செயல்படும் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் தனி தனியே குழுக்கள் அமைத்து 100 சதவிகிதம் வாக்களிக்க பொதுமக்களுக்கு விஈப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.

மேலும், பயங்கரவாதிகளை துணிந்து அழித்து நாட்டு மக்களுக்கு அரணாக திகழக்கூடிய பாஜக அரசு மீண்டும் நிலையான ஆட்சியை அமைக்க வேண்டும். அப்போது தான் சர்வதேச தரத்தில் நமது நாட்டின் மதிப்பு உயரும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க