February 17, 2021
தண்டோரா குழு
இந்திரா ஐவிஎப் இந்தியாவின் முன்னணி கருவுருவாக்கல் சிகிச்சை கிளினிக், தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ நிபுணத்துவத்தால் 75,000 கருவுருவாக்கலை வெற்றிகரமாக செய்து முடித்து சாதனை புரிந்துள்ளது.
ஒரு பொதுநல நோக்கத்தோடு செயல்படும் சுகாதார நிறுவனமாக, இந்திரா ஐவிஎப், இந்தியாவின் தொலைதூரத்தில் உள்ள பகுதியிலும் கூட கருவுருவாக்கல் சிகிச்சை அளித்துள்ளதில் பெருமை கொள்கிறது. துவக்கப்பட்ட 2011 ம் ஆண்டு முதல், நாடு முழுவதும் 94 மையங்களை கொண்டுள்ளது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சிகிச்சைகளைக் கையாண்டுள்ளது. இந்தியாவில் மாபெரும், மிகவும் நம்பிக்கையான கருவுருவாக்கல் மருத்துவமனைகளை கொண்ட நிறுவனமாக இந்திரா ஐவிஎப் உள்ளது.
இந்திரா ஐவிஎப் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் அஜய் முர்டியா கூறுகையில்,
எங்களது பணியால் பல குடும்பங்கள் பயனடைந்துள்ளதை நினைக்கும்போது, ஒரு ஆழ்ந்த திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. மலட்டுத்தன்மையை சமுதாயத்திலிருந்து மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பணியாற்றிய நாங்கள், மருத்துவ அறிவியல் உதவியால் தீர்வு கண்டுள்ளோம் என்பதில் எங்களுக்கு பெருமையே, என்றார்.
இந்திரா ஐவிஎப் தலைமை செயல் அதிகாரியும் இணை நிறுவனருமான டாக்டர் ஷிட்டிஜ் முர்டியா கூறுகையில்,
வெற்றிகரமான சிகிச்சையின் விளைவாக இவ்வளவு வெற்றிக்கதைகளை நினைவு கூறுகிறோம். எங்களது இலக்கை அடைய சர்வதேச தரம் வாய்ந்த தொழில்நுட்பங்கள் பேருதவியாக இருந்தது. ஒருபுறம் அதிநவீன மருத்துவ தொழில்நுட்பம் உதவியுடன், மறுபுறம் குறைந்த கால அளவில் எங்களது நிறுவனத்தை நிபுணத்துவம் வாய்ந்தாக மாற்றியுள்ளோம். சென்ற ஆண்டு எங்களது வளர்ச்சியையும் நோக்கத்தையும் விரைவுபடுத்த புதிய அணியை உருவாக்கினோம். இந்திரா ஐவிஎப்-ல், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணத்துவமிக்கவர்களை சேர்த்து, எங்களது பணிகளை முன்னிலைப்படுத்தியுள்ளோம், என்றார்.
இந்திரா ஐவிஎப் இணை நிறுவனர் மற்றும் இயக்குனர் நிடிஜ் முர்டியா கூறுகையில்,
கடந்த சில ஆண்டுகளில் ஐவிப் சிகிச்சை பெரும் வளர்ச்சியை பெற்றுள்ளது. பல தம்பதியினர் முதல் சுற்று சிகிச்சையிலேயே கருவுற்றுள்ளனர். மலட்டுத்தன்மைக்கான சிகிச்சையில் இருந்து வந்த மூடநம்பிக்கை, சிக்கல்களை குறைத்துள்ளோம் என்பதில் பெருமை கொள்கிறோம். இந்தியாவில் உள்ள தொலைதூர பகுதிகளில் சிகிச்சை அளிப்பதை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்துவோம், என்றார்.
மேலும், அதிநவீன சிகிச்சைக்கான கட்டமைப்பு வசதியுடன், இந்திரா ஐவிஎப், எண்ணிக்கையிலடங்கா தம்பதியினருக்கு உதவியுள்ளது. கடினமான பாதையாக இருந்தாலும், அவர்களது குடும்பக் கனவை, நனவாக்க உதவியாக இருப்போம். 40 வயதுக்கு முன் தங்களது குடும்ப திட்டத்தை தள்ளிப்போட விரும்பும் பல இளம் பெண்கள், ஆண்களுக்கு ஆலோசனைகளையும், கருமுட்டை மற்றும் விந்தணு சேகரிப்பு உறை வங்கி வசதியையும் கொண்டுள்ளோம் என்றார்.