• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய விமானி அபி நந்தனைப் பற்றி சமூக வலைதளங்களில் பரவும் போலிக் காணொளி

March 2, 2019 தண்டோரா குழு

பாக் தீவரவாத தாக்குதலுக்குப் பதிலடி தரும் வகையில் கடந்த 26 ஆம் தேதி இந்திய விமானப்படை, பாக்-இந்திய எல்லையில் தீவரவாத முகாம்களைத் தகர்க்க, பதில் தாக்குதல் நடத்தியது .

இந்திய விமானப்படையின் மிக் – 21 பைசன் போர் விமானத்தை இயக்கிய விமானி அபிநந்தன் வர்தமன் பாகிஸ்தான் போர் விமானமான F17 யை தாக்கி, தன் விமானம் பழுதடைந்ததால் பாக். எல்லைப் பகுதியில் தரையிறங்கும் நிலை ஏற்பட்டது. அந்தப் பகுதியில் இருந்த பாக் ராணுவ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அபி நந்தன் பாக். சிறையில் அடைக்கப்பட்டார்.

26 ஆம் தேதி மதியம் அபி நந்தன் கைது செய்யப்பட்ட காட்சிகள், மற்றும் பாக் ராணுவ அதிகாரிகள் நன்முறையில் அவருடன் உரையாடும் காட்சிகள் யாவும் பாக். ராணுவத்தின் டிவிட்டர் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.

பாகிஸ்தான் நாட்டிற்கு ஆதரவாகவும், இந்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் பல விமர்சனங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டன. சமாதானத்தை மட்டும் விரும்புவதாக தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அபி நந்தனை இந்திய அரசிடம் ஒப்படைப்பதாக பாக் நாடாலுமன்றத்தில் அறிவித்தார். இதை ஆதரித்து சமூக வலைதளங்களில் பல கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது.

பாக் ராணுவ அதிகாரிகள் மார்ச் 1 ஆம் தேதி அபி நந்தனை வாகா பார்டரில் இந்திய ராணுவத்தினரிடம் ஒப்படைத்தார். இதற்குப்பின்னர் , நேற்றிரவு அபி நந்தன் பாக் ராணுவ வீரர்களுடன் நடனமாடுவதாக ஒரு காணொளி வைரல் ஆகியது. இதன் உண்மை தரத்தை அறியாமல் நிறைய இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் இந்த காணொளியை வாட்ஸ் ஆப்பிலும், டிவிட்டரிலும், முகநூலிலும் பகிர்ந்தவண்ணம் இருந்தனர்.

இந்த இரண்டு நிமிடக் காணொளியை உற்று நோக்கி ஆராய்கையில் அதில் அபி நந்தன் முக சாயலில் ஒருவர் கூட இல்லை என்பதை அறியலாம். காணொளியின் தரம் மிகவும் குறைவாக இருப்பதையும் காணலாம்.
எந்தொவொரு உண்மைத்தன்மையும் இல்லாமல், நம் நாட்டு ராணுவத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில சமூக விரோத விசமிகளால், பிப்ரவரி 23 ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரு காணொளியின் தலைப்பை மாற்றி நேற்று சமூக வலைதளங்களில் திட்டமிட்டு பரப்பட்டுள்ளது.

மக்களும் இதனை முழுக்க ஆராயாமல் பல முறை பகிர்ந்து, காழ்ப்பைக் கொட்டியப்படி இருந்து வருகின்றன. இதுப்போன்ற போலி செய்திகளையும், காணொளிகளையும் பரவ செய்து உண்மையை திரிக்கும் செயல்களும் ஒரு வித தேசவிரோத செயல் என்பதை மக்கள் நன்கு உணர வேண்டும்.

மேலும் படிக்க