• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த தயார் – விஜய் மல்லையா

June 26, 2018 தண்டோரா குழு

இந்திய வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த தயாராக உள்ளதாக தொழிலதிபர் விஜய் மல்லையா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பல்வேறு பொத்துறைகளில் வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடி அங்கு தற்போது வாழ்ந்து வருகிறார்.

அவர்மீது பல்வேறு வங்கிகள் சார்பில் தொடர்பட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.அமலாக்கப்பிரிவு,சிபிஐ நீதிமன்றம் என தனித்தனியாக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.வங்கிகளுக்கு தர வேண்டிய பாக்கியை வட்டியுடன் விஜய் மல்லையா செலுத்தியே தீர வேண்டும் என்று கர்நாடகாவில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இதன்படி,விஜய் மல்லையாவிடம் ரூ.10 ஆயிரம் கோடி பாக்கியை வசூலித்து தரும்படி, 13 இந்திய வங்கிகள்,இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.ஆனால்,விஜய் மல்லையாவோ,உலகம் முழுவதும் தனது சொத்துகளை முடக்கும் உத்தரவை ரத்து செய்யக் கோரினார்.ஆனால்,அவரது கோரிக்கையை நீதிபதி ஆன்ட்ரூ ஹென்சா நிராகரித்தார்.இதையடுத்து, தற்போது வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த தயாராக உள்ளதாக விஜய் மல்லையா கூறியுள்ளார்.

இதுகுறித்து விஜய் மல்லையா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“வங்கி கடன் விவகாரம் தொடர்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ல் பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு கடிதம் எழுதினேன்.ஆனால்,எந்த பதிலும் கிடைக்கவில்லை. கிங்பிஷர் விமான நிறுவனத்திற்கு கடன் வாங்கி கொண்டு நாட்டை விட்டு ஓடிவிட்டதாக அரசியல்வாதிகளும்,மீடியாக்களும் என் மீது குற்றம் சாட்டின.

அரசு மற்றும் வங்கிகள் சார்பாக,என் மீது தவறான மற்றும் ஏற்று கொள்ள முடியாத குற்றச்சாட்டுகளை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பதிவு செய்தன.எனக்கு சொந்தமான நிறுவனங்களின் சொத்துகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.வங்கிகள் செய்த தவறு காரணமாக பொது மக்களுக்கு என் மீது கோபம் அதிகரித்தது.வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த தயாராக உள்ளேன்.வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுத்துள்ளேன். என குறிப்பிட்டுள்ளார்”.

மேலும் படிக்க