• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய தொழில் வர்த்தக சபையில் இந்தியா ரஷ்யா தொழில் மேம்பாடு குறித்து கருத்தரங்கு

May 26, 2023 தண்டோரா குழு

இந்திய தொழில் வர்த்தக சபை கூட்ட அரங்கில் இந்தியா ரஷ்யா தொழில் மேம்பாடு குறித்தும் கோவை தொழில்துறையினரின் உற்பத்தி பொருள்கள் ரஷ்யா ஏற்றுமதி செய்வது குறித்தும் கலந்துரையாடல் நிகழ்ச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் ஸ்ரீ ராமுலு தலைமையில் நடைபெற்றது

இந்தியா ரஷ்யா தொழில் வர்த்தக சபையின் துணைத் தலைவர் ஜெம் வீரமணி முன்னிலை வைத்தார்.இந்திய தொழில் வர்த்தக சபையின் துணைத் தலைவர் சுந்தரம் செயலாளர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் வர்த்தக சபை தலைவர் பேசும்போது,

கோவை தொழிலதிபர்கள் இங்கு உள்ள உற்பத்தி பொருட்களை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் ரஷ்யாவில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதற்கும் உரிய ஆலோசனை பெற வேண்டி இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம். இதன் மூலம் கோவை ரஷ்யா இடையே வர்த்தகம் பெறும் வாய்ப்பை நாம் பெறலாம் என்று கூறினார்.

தென்னிந்தியாவின் ரஷ்யா துணை தூதர் ஓலக் அவுதீயூ பேசுகையில்,

இந்தியா ரஷ்யா தொழில் கூட்டமை ஒப்பந்தப்படி ரஷ்யாவில் இருந்து 500க்கும் மேற்பட்ட பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகிறது.
இதே போல் இந்தியாவில் இருந்து டீ காபி பெட்ரோலிய பொருட்கள் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.இந்த தொழில் வர்த்தகத்தில் சில இடர்பாடுகள் உள்ளன போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி இறக்குமதி பொருள்களுக்கான பண பரிமாற்றத்தில் இவற்றில் உள்ள சிக்கல்களை களைய பேச்சுவார்த்தையின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சென்னை அருகே கடல்வழி பயணம் புதிதாக ஒரு முனையத்தை ஏற்படுத்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டு வருகிறது இந்த துறைமுகம் செயல்பாட்டிற்கு வந்தால் செலவினங்கள் குறைந்து ஏற்றுமதி இறக்குமதி வேகமாக நடைபெறும்இந்திய தொழில் முன்னேற்றம் அடையும்.கோவை தொழிலதிபர்களின் உற்பத்தி பொருள்கள் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு எந்தெந்த வகையில் வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்து அவற்றை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்வோம் என்றார்.

ரஷ்யா இந்தியா தொழில் வர்த்தக சபை பொதுசெயலர் தங்கப்பன் மற்றும் இந்திய தொழில் வர்த்தக சபை உறுப்பினர்கள் பேரலாக பங்கேற்றனர்.

மேலும் படிக்க