• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் தென் மண்டல அளவிலான இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்

July 16, 2018 தண்டோரா குழு

கோவையில் இந்திய தேர்தல் ஆணையத்தின்,துணை தேர்தல் ஆணையர் தலைமையில் தென் மண்டல அளவிலான இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது.

கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தேர்தல் ஆணையம் தொடர்பாக மண்டல அளவிலான இணைய பாதுகாப்பு விழிப்பிணர்வு முகாம் நடைபெற்று வருகின்றது.இந்திய தேர்தல் ஆணையத்தின்,துணை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தலைமையில் நடைபெற்று வரும் இந்த முகாமில் தமிழ்நாடு,ஆந்திரா,தெலுங்கானா,கர்நாடக,கேரளா,அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவுகள்,புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து தேர்தல் அலுவலர்கள்,உதவி தேர்தல் அலுவலர்கள்,வாக்குபதிவு அலுவலர்கள்,உதவி வாக்குப்பதிவு அலுவலர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இம்முகாமில் தமிழ்நாடு முதன்மை தேர்தல் அலுவலர் சத்தியப்ரதா சாஹி,குஜராத் மாநில முதன்மை தேர்தல் அலுவலர் திரு முரளி கிருஷ்ணா, இந்திய தேர்தல் ஆணைய தகவல் தொழில்நுட்ப இயக்குநர் குஷால் குமார் பாதக் ஆகியோர் கலந்து கொண்டு இணைய பாதுகாப்பு குறித்த பயிற்சி அளித்து வருகின்றனர்.மேலும்,சைபர் பாதுகாப்பில் அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும்,தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பிரச்ச்சனைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க