• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய தாக்குதலால் பீதியடைந்த பாகிஸ்தான்; ஐ.நா, இஸ்லாமிய நாடுகளிடம் முறையிட திட்டம்!

February 26, 2019 தண்டோரா குழு

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எல்லையில் செயல்பட்டுவந்த ஜெய்ஷ் -இ-முகமது தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை குண்டுவீசி தகர்த்தெறிந்தது. இந்த தாக்குதல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பிடம் புகார் அளிக்க பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது.

கடந்த பிப்.14-ம் தேதி நிகழ்த்தப்பட்ட புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று(பிப்.,26) அதிகாலை 3.30 மணியளவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 வகை விமானங்கள், இந்திய, பாக்., எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே செயல்பட்டு வந்த பயங்கரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தி தகர்த்தது. பாலகோட், சக்கோத்தி, முஷாபாராபாத் ஆகிய 3 பகுதிகளில் இருந்த பயங்கரவாதிகள் முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.

இதில் புல்வாமா தாக்குதலை அரங்கேற்றிய ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் கட்டுப்பாட்டு அறையும் குண்டுவீசி தகர்க்கப்பட்டன. இதில் பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிந்து போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் இந்திய விமானப்படை 1000 கிலோ வெடி குண்டுகளை வீசியுள்ளதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 200 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிகிறது. பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய விமானப்படை தாக்கியபோது அதனை முறியடிக்க பாகிஸ்தானின் F16 ரக போர்விமானம் வந்துள்ளது. இந்தியாவின் மிராஜ் 2000 ரக விமானங்கள் அதிகளவில் இருந்ததால் பாகிஸ்தான் விமானம் திரும்பிச்சென்றதாக கூறப்படுகிறது.

இந்திய விமானப்படையின் இந்த வீரதீர செயலுக்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இதையடுத்து, பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் பாகிஸ்தான் ஆதரவு பெற்று செய்யல் பட்டு வந்த தீவிரவாத அமைப்புகளுக்கு பெரும் பின்னடைவாக இந்த நடவடிக்கை கருதப்படுகிறது. மேலும் இந்திய விமானப்படை தாக்குதல் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் அரசுக்கு நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் முப்படை தளபதிகள், அதிகாரிகள், அமைச்சர்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக்கு பின்னர் வெளியுறவு அமைச்சர் குரேஷி பேசுகையில் ”

பாகிஸ்தான் பகுதிக்குள் புகுந்து இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியது எங்கள் நாட்டின் இறையான்மையை மதிக்காத செயல். பாகிஸ்தானை ஆக்கிரமிக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடுகிறது. இதனை ஏற்றுக் கொள்ள மாட்டோம். இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை, இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடம் முறையிடுவோம். எங்களுக்கு ஆதரவான நாடுகளை அணி திரட்டுவோம். இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுப்போம் ” என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க