December 26, 2020
தண்டோரா குழு
இந்திய ஜனநாயக கட்சியில் இளைஞர்கள் மற்றும் இளம் தலைமுறையினர் ஆர்வமுடன் இணைந்து வருவதாக அக்கட்சியின் மாநில இணை பொது செயலாளர் லீமாரோஸ்மார்ட்டின் கோவையில் தெரிவித்துள்ளார்.
இந்திய ஜனநாயக கட்சியின் மாநில இணை பொது செயலாளராக கோவையை சேர்ந்த லீமா ரோஸ் மார்ட்டின் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவருக்கு பாராட்டும் தெரிவிக்கும் விதமாக இந்திய ஜனநாயக கட்சியின் மேற்கு மண்டலம் கோவை மாநகர் மாவட்டம் சார்பாக விமான நிலையம் அருகே கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட இந்திய ஜன நாயக கட்சியின் மாநில இணை பொது செயலாளர் லீமா ரோஸ் மார்ட்டின் கட்சி கொடியேற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
எங்களது கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் மற்றும் மாநில தலைவர் ரவி பச்சைமுத்து,செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் தலைமையில் இந்திய ஜனநாயக கட்சி தமிழகத்தில் சிறப்பாக செயல்படுவதாகவும், மேலும் இளைஞர்கள் மற்றும் இளம் தலைமுறையினர் தற்போது கட்சியில் ஆர்வமுடன் இணைந்து வருவதாக அவர் தெரிவித்தார். விழாவில் கோவை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஈஸ்வரன் முத்துச்செல்வம் திருமுருகப்பன்,பூர்ண லிங்கம் மற்றும் திருப்பூர் மாவட்ட தலைவர் பாரி கணபதி மற்றும் மகளிர் அணியினர் என பலர் கலந்து கொண்டனர்.