• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய அளவில் நடந்த ஹேக்கத்தான் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல் பரிசு

August 18, 2020 தண்டோரா குழு

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு தேசிய அளவில் பல hakcathons -இல் வென்ற ஆகஸ்ட் மாதம் ஒரு நிகழ்வு நிறைந்த மாதமாகும். கணினி அறிவியல் மற்றும் பொறியியல், தகவல் தொழில்நுட்பம், இயந்திர பொறியியல் மற்றும் மின் மற்றும் மின்னணு பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த மாணவர் குழு hakcathons -இல் பங்கேற்று ரொக்க விருதுகளுடன் முதலிடம் பிடித்தது. கணினி அறிவியல் மற்றும் பொறியியல், தகவல் தொழில்நுட்பம், துறையை சேர்ந்த மாணவர்கள் அகில இந்திய தொழில் நுட்பகழகத்தின் மென்பொருள் இந்தியா hakcathon 2020 இல் பங்கேற்றனர்.

நிலையான வளர்ச்சியில் தொழில்களில் இருந்து வரும் CEMS / CEQMS மாசுபாடுகளை கண்காணிப்பதற்கான கிளவுட் அடிப்படையிலான பயன்பாட்டின் வளர்ச்சி எனும் அறிக்கையில் அவர்கள் பணியாற்றினர். 168 பங்கேற்பாளர்களைக் கொண்ட 28 அணிகளில் இந்த அணி முதலிடத்தைப் பிடித்தது. ஜெயராம் டி, ஜெயந்தி பி, தயானிதி பாலாஜி கே கே, பேபி ஷாலினி வி, தியானேஷ்வரன் கே மற்றும் ஜமால் ரபியா எச் ஆகியோர் அடங்கிய மாணவர் அணி முதல் பரிசு ரூ. 1 லட்சம் தொகையை பெற்றுள்ளார்கள் மற்றும் குழுவிற்கு கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் இணை பேராசிரியர் டாக்டர் ஆர். கிங்ஸி கிரேஸ் வழிகாட்டினார்.

தகவல் தொழில்நுட்பம் துறையை சேர்ந்த மாணவர்கள் குழு IBM –Code Global Challenge Edition -the TechGig Code Gladiators 2020 # CodeInQuarantine 150 நாட்கள் hackathon போட்டியில் கலந்து கொண்டு ரூ 1.5 லட்சம்பரிசு தொகையை பெற்றுள்ளார்கள். சி.ஆர்.அருணாச்சலம் மற்றும் திரு தனுஷ்குமா ஆகியோர் அடங்கிய குழுவுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையின் இணை பேராசிரியர் டாக்டர் ப்ரீத்தி ஹாரிஸ் வழிகாட்டினார்.

இயந்திர பொறியியல் மற்றும் மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையை சேர்ந்தமாணவர்கள்TATA Crucible Hackthon 2020 தெற்கு மண்டல பதிப்பில்கலந்துகொண்டுமுதலிட விருது மற்றும் ரொக்கதொகையாக ரூ. 70,000 / -பெற்றுள்ளனர். ரிஷி பி, ஜெகதீஷ் எம், ரிபி ஜே, விக்னேஷ் எம், சந்தோஷ் குமார்.என், ஆகியோரைக் கொண்ட குழுவை இயந்திர பொறியியல் உதவி பேராசிரியர் பி பிரணேஷ் மற்றும் மின் மற்றும் மின்னணு பொறியியல்உதவி பேராசிரியர் ஆர் கே ராகவபிரியா ஆகியோர் வழிநடத்தினர்.

மேலும் படிக்க