• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய அரசு இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது கோவையில் ஆர்ப்பாட்டம் !

October 24, 2023 தண்டோரா குழு

இஸ்ரேல் -பாலஸ்தீனத்துக்கு இடையே கலந்த ஒரு மாதத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது.இதில் காசா உட்பட பாலஸ்தீனத்தின் பல்வேறு பகுதிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளன.

அப்பாவி பொதுமக்கள் பலியாகி வர கூடிய நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.இந்நிலையில் கோவையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், ஜமாத்கள் மற்றும் அரசியல் இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அப்பொழுது இந்திய அரசு இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது எனவும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தனது செயல்பாடுகளை அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தபட்டது.பா.ஜ.க , ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை தவிர அனைத்து தரப்பினரும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்.

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பீக் ஹவரில் ஊர்வலம் செல்ல அனுமதிக்கும் போலீசார், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்லாமியர்கள் பேரணி செல்ல விடாமல் அனுமதி மறுப்பதாகவும்,இதை தமிழ்நாடு அரசு கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக வள்ளியம்மை பேக்கரி முன்பாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

மேலும் படிக்க